தி.மு.க.வினர் கொலை மிரட்டல்! துணை நடிகை பரபரப்பு புகார்!

Photo of author

By Hasini

தி.மு.க.வினர் கொலை மிரட்டல்! துணை நடிகை பரபரப்பு புகார்!

இரண்டு நாட்களுக்கு முன் நடிகைக்கு எதிராக தெருவாசிகள் போராட்டம் மேற்கொண்ட நிலையில்,நமது செய்தியில் கூட தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் தற்போது அவர் போலீசாரிடம் கட்சியினர் மீது புகார் ஒன்றை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.

ஆதிரா பாண்டி லக்ஷ்மி என்பவர் ஒரு குப்பை கதை மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த குற்றச்சாட்டு கடந்த நான்கு நாட்களாகவே தொடர்ந்து வெளிவந்து கொண்டு உள்ளன.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது சந்தேகதிர்க்கிடமான சிலர் எதிர் வீட்டில் சுவர் ஏறுவதை தட்டிக்கேட்ட என்னையும், மகனையும் அப்பகுதி திமுக இளைஞர் அணியினருடன் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி, வீட்டில் நுழைந்து என் மகனை அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பு அரசு கொடுக்குமா? மேலும் எனது நம்மாழ்வார் அக்குப்பஞ்சர் சிகிச்சை மையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை இங்கு வந்தால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டி அங்கிருந்த பைக்குகளை அவர் மீது தள்ளும் மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் திமுக இளைஞர் அணி நபர்கள். அரசின் நடவடிக்கை தேவை என்றும் கூறியுள்ளார்.

இது பற்றி அந்த தெருவாசிகள் இவருக்கு எதிராக இணைந்துள்ளனர். இவரைப்பற்றி அவர்கள் போலீசில் புகார் தெரிவித்த நிலையில், தற்போது கொலை மிரட்டல் விடுவதாக இவர் கூறியுள்ளார்.

மாறி மாறி புகார் தெரிவிப்பதால் போலீசார் இதுபற்றிய உண்மை நிலையை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர்.

இது பற்றி துணை நடிகை கூறுகையில், என் சொந்த வீட்டிலிருந்து எங்களை விரட்ட தொடர்ச்சியாக ஈடுபடுகிறார்கள். திமுகவின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க கட்சிப்பெயரை தவறாக பயன்படுத்தி பல தவறுகளை செய்கிறார்கள் அதில் ஒன்றுதான் இது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எங்கள் நம்மாழ்வார் அக்குபஞ்சர் சிகிச்சை மையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை மிரட்டி பைக்குகளையும் தள்ளிவிடுகிறார்கள். கொலை மிரட்டல் விடுபவர்களிடமிருந்து பாதுகாப்பு தர அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://twitter.com/i/status/1404005739740352516 என்று ட்விட்டர் தளத்தில் வீடியோவையும் பதிவிட்டு உள்ளார்.