ரேஷன் கடைகளில் ஆள் பிடிக்கும் திமுக…! கைகட்டி வேடிக்கை பார்க்கும் கூட்டுறவுதுறை…!

Photo of author

By Sakthi

திமுகவினர் ரேஷன் கடைகளில் சுற்றித் திரிவதாக ஒரு தகவல் தெரிய வந்திருக்கிறது இதற்கான காரணம் என்னவென்று கேட்டால் இணையதளம் மூலமாக கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்காக தான் என்று கூறப்படுகின்றது.

அனைவரும் நம்முடன் என்ற தலைப்பில் திராவிட முன்னேற்ற கழகம் ஒரு இணைய வழி உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகின்றது இந்த சேர்க்கை ஒரு அளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறது இதனை ஆரம்பித்த ஒரே வாரத்தில் சுமார் இரண்டு லட்சத்து 93 ஆயிரத்து 355 உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள்.

அதேநேரம் பல சர்ச்சைகளையும் இந்த முறை ஏற்படுத்தி இருக்கின்றது முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி பெயரில் இணையவழியில் உறுப்பினர் அட்டை உதயமாகியது அந்த அட்டையினை சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது இதனை கண்ட அவருடைய ஆதரவாளர்கள் அண்ணனை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி என்று ஹேஷ்டேக் செய்து பகிர்ந்து இருக்கிறார்கள் அதுபோல அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெயரிலும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கின்றது டிரம்ப் எழும்பூர் தொகுதியினை சார்ந்தவர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது இதெல்லாம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்படுகின்றது என திமுக தரப்பில் தெரிவிக்கப்படும் அது பற்றி விமர்சனங்கள் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் மற்றொரு பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கின்றது ரேஷன் கடைகளில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஆள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது அதாவது மாவட்டத்தில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்து கட்சி தலைமையிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவில் இறங்கி இருக்கிறார்களாம்.

சில நிர்வாகிகள் இதற்காகவே இளைஞர்களுக்கு புதிதாக கைபேசிகளை வாங்கிக்கொடுத்து ரேஷன் கடைகளில் முன்பாக நிற்க வைத்து விடுவார்களாம் அந்த இளைஞர்களும் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களிடம் தங்களுடைய விபரங்களை அவர்களிடம் கேட்டு பதிவு செய்து உடனே கட்சியின் உறுப்பினர் அட்டையும் வழங்கி விடுகிறார்களாம் இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த ஆட்சி திமுக ஆட்சியாக இறந்து விட்டால் என்னாவது என்ற பயம் என்று சொல்கிறார்கள் ஒரு சிலர் இதெல்லாம் உண்மைதானா என்று முழுமையாக தெரியாவிட்டாலும் திமுகவின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.