DMK: சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுகவில் உட்கட்சி பிளவு ஏற்பட்டு வருவது மட்டுமல்லாமல், கட்சி பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. மேலும் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிலும் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என காங்கிரஸ் கட்சியும், விசிகவும் வலியுறுத்தி வருகிறது. இது திமுகவிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில், மேலும் ஒரு பேரிடி ஸ்டாலின் தலையில் விழுந்துள்ளது.
திமுகவின் முக்கிய அமைச்சர்களாக அறியப்படும் கே.என். நேரு, செந்தில் பாலாஜி மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இப்போது புதிதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, சக்கரபாணி, மூர்த்தி, ஏ.வ வேலு போன்ற முக்கிய அமைச்சர்கள் மீது ED ரைடு நடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி, கே.என். நேரு போன்ற அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தொடர்பாக திமுக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது கிடைக்கபெற்ற தகவல், திமுக தலைமைக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டுமல்லாமல், கரூரில் நடந்த 41 பேர் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் காரணம் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாக விஜய் மக்களின் கரிசனத்தை பெற்றார். இதனை சரி செய்ய திமுக பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர்கள் மீதான இந்த செய்தி 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

