DMK CONGRESS: கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது மட்டும் வழக்கு தொடுக்கப்பட்டதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தன. விஜய் மீது ஏன் வழக்கு பதியப்படவில்லை என்று கேள்வி எழுப்பட்ட சமயத்தில் அது குறித்து திமுக அரசு எந்த பதிலும் அளிக்காமல் இருந்தது. விஜய்யின் நெருங்கிய நண்பரான ராகுல் காந்தி சொல்லியதால் தான் வழக்கு பதியப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் இதனை செய்யாவிட்டால் காங்கிரஸ், திமுக கூட்டணியை விட்டு விலகிவிடும் என்று பயந்து தான் திமுக இதனை செய்தது என்றும் பலர் கூறிவந்தனர். ஆனால் இவ்வளவு உதவிகளை செய்த திமுகவை விட்டு விலகி, காங்கிரஸ் தற்போது விஜய்யுடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாகவும் சில தகவல் வந்துள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் போனில் பேசிய ராகுல் காந்தி, கூட்டணி குறித்தும் பேசியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
சில தினங்களுக்கு முன்பு ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றது பாஜக தலைவர்களை சந்திக்க தான் என்று கூறி வந்தனர். ஆனால் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேசுவதற்காக விஜய் அவரை அங்கு அனுப்பியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் தவெகவிடம் எவ்வளவு தொகுதிகள் கேட்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ்-தவெக என்ற மும்முனை போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்ப்படுகிறது.