தமிழகத்தில் பெண்கள் சேலை உடுத்துவது தவறா? கனிமொழியின் பேச்சால் பரபரப்பு!

0
178

கோவையில் உயர்கல்வி நிறுவனத்தில் 21 ஆம் நூற்றாண்டின் உயர் கல்விக்கு மாணவிகளை தயார்படுத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று கொண்டு உரையாற்றினார்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாணவிகளிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் பெண்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக சில கருத்துக்களை முன்வைத்தார். பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் என்று தெரிவித்த அவர், மேலும் சில கட்டுப்பாடுகளை பெண்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். பெண்கள் தங்களுடைய ஆடைகளை குறைத்து போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.

தமிழ் கலாச்சாரம் தான் உலகின் தலைசிறந்தது என்று பேசிய அவர், சேலை கட்டுவது நவீன கால மார்டன் ஸ்டைல் என்பதை பெண்கள் உணர வேண்டும் என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு தற்போது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. பெண்ணிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோவையில் தமிழிசையின் பேச்சு தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் தெரிவித்ததாவது, பெண்கள் தான் என்ன உடை அணிய வேண்டும் என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அது ஆடையாக இருந்தாலும் சரி, அலங்காரமாக இருந்தாலும் சரி அடுத்தவர்கள் முடிவு செய்ய இயலாது என்றும், விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் திராவிட மாடல் ஆட்சி என்று தெரிவித்துக் கொண்டு மறுபுறம் நாங்கள் தமிழை காக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் திமுக அரசு தமிழுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சொல்லி ஹிந்தி திணைப்பை எதிர்த்து வருகிறது.

ஆனால் மத்திய அரசோ விருப்பப்பட்டு யாராக இருந்தாலும் ஹிந்தியை கற்றுக் கொள்ளலாம் ஹிந்தி படிப்பது கட்டாயம் அல்ல என்ற விளக்கம் அளித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க எப்பொழுதும் நாங்கள் தமிழுக்கு முன்னுரிமை வழங்குவோம் என்று தெரிவித்து விட்டு தற்போது தமிழ் கலாச்சாரத்தை அவமானப்படுத்தும் விதமாக கனிமொழி இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கருத்து ஒரு வகையில் சரிதான் என்றாலும் கூட, ஒரு வகையில் பார்த்தால் அது தவறாகத்தான் தெரிகிறது.

புடவை என்பது தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாக திகழும் ஒரு பெண்களுக்கான ஆடை அந்த புடவையை அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியது தவறு என்று சொல்வதைப் போல கனிமொழியின் கருத்து இருக்கிறது.

கனிமொழியின் கருத்தை ஆராய்வதற்கு முன்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்த கருத்து தொடர்பாக நாம் ஆராய்ந்து விட்டு வந்து விடலாம் அதாவது தமிழகத்தில் பெண்கள் சேலை உடுத்துவதை மாடர்ன் ஸ்டைல் ஆக கருத வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம் மற்ற மாடன் உடைகளை அணியக்கூடாது என்று எந்த விதத்திலும் அடிக்கோடிட்டு பேசவில்லை தமிழ் கலாச்சார முறைப்படி சேலை கட்டுவது பெண்களின் அடையாளம் சேலை கட்டுவது தான் சரி என்று தான் பேசி இருக்கிறாரே தவிர எந்த விதத்திலும் மற்ற விதத்தில் ஆன ஆடைகளை குற்றம் சுமத்தி அவர் பேசவில்லை.

பெண்கள் என்ன விதமான ஆடைகள் அணிய வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம் தான் அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் தமிழ் கலாச்சார முறைப்படி சேலை அணிந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு கருத்தை முன் வைத்தது என்னவோ மிகப்பெரிய தவறு என்பதை போல கனிமொழி பேசி வருகிறார்.

இது ஒரு உரம் இருந்தாலும் நாங்கள் தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்குவோம் என்று தெரிவித்துக் கொண்டிருக்கும் திமுக தமிழ் கலாச்சார ஆடையான சேலையை பெண்கள் உடுத்துவது தவறு என்று நினைக்கிறதா என்ற கருத்தும் தற்போது உலாவத் தொடங்கி இருக்கிறது. கனிமொழி தெரிவித்த இந்த கருத்தின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்று பலரும் சிந்தித்து வருகிறார்கள்.

Previous articleதமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்கில் நடிக்கப்போவது இவர்தான்… வெளியான தகவல்!
Next articleவிடிய விடிய அவசரமாக டெல்லிக்கு புறப்பட்ட தமிழக ஆளுநர்! உள்துறை அமைச்சரை சந்திப்பாரா?