DMK: கரூர் மாவட்டத்தில் திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக திமுகவின் எம்பி திருச்சி சிவா கலந்து கொண்டார். இவர் 1996 முதல் இன்று வரை திமுகவில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். தமிழகத்தின் திமுகவின் மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார்.
இக்கூட்டத்தில் அதிகளவில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திருச்சி சிவா பேசி கொண்டிருக்கும் போது செந்தில் பாலாஜி வந்ததால் மேடையில் இருந்த தலைவர்களும், கீழே இருந்த தொண்டர்களும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று வரவேற்பளித்தனர்.
இதனை கண்ட திருச்சி சிவா “யோவ் யாரா இருந்த என்ன? இங்க பாரு, அவர் பாட்டுக்கு வராரு, நீங்க ஏன் அங்க பாக்குறீங்க, நான் அடி வயிற்றிலிருந்து பேசிட்டு இருக்கேன்” என கோபமாக பேசியிருக்கிறார். பிறகு செந்தில் பாலாஜி அவரிடம் மன்னிப்பு கேட்டு சால்வை அணிவித்தார். திருச்சி சிவா கோபமாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாகவே திமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டணி கட்சிகளும் திமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. திருச்சி சிவாவின் இந்த செய்கை செந்தில் பாலாஜிக்கும், இவருக்கும் ஏற்கனவே சண்டை நடந்ததற்கு அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்த சண்டை தொடரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. ஏற்கனவே தொகுதி பங்கீட்டில் சிக்கி தவிக்கும் திமுகவிற்கு இது புதிய சர்ச்சையாக எழுந்துள்ளது.