DMK TVK: திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். 2 மாபெரும் மாநாடுகளை நடத்திய அவர் தற்போது தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது கரூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஒருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாகி இருப்பவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என்றும் குறிப்பிட்டிருந்தது. இது குறித்து பேசிய முதல்வர் நீதிமன்றத்தின் அனைத்து விதிகளுக்கும் அரசு கட்டுப்படுகிறது.
இனி இது போன்ற இழப்புகள் நடைபெறாது என்றும் தெரிவித்திருநத்தார். இந்த இழப்புகள் அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டிய தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதியப்படாமல் இருப்பது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்ந்து திமுக அரசு விஜய்யை பாதுகாக்கிறதா என்ற கேள்வியையும் பலர் எழுப்பினர். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவனும் ஏன் விஜய் மீது வழக்கு பதியவில்லை என்ற கேள்வியை கேட்டிருந்தார்.
இந்த அத்தனை கேள்விக்கும் பதிலளித்த ஸ்டாலின், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் விஜய் கைது செய்யப்படுவார் என்று கூறி முடித்தார். திமுக அரசின் தூண்டுதல் மூலம் தான் விஜய் ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வியை பலரும் எழுப்பியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த கேள்வியின் மூலம் விஜய் மீது வழக்கு தொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தி, அவரை கைது செய்து விடலாம் எனவும் திமுக திட்டம் திட்டுவதாக சொல்லப்பட்டு வருகிறது.