ஸ்டாலினும் ரஜினியும் ரகசியக் கூட்டா? அம்பலமானது ரகசியம்!

Photo of author

By Sakthi

ரஜினியின் மக்கள் மன்றத்தின் உடைய 4 மாவட்ட செயலாளர்கள் சென்ற 17ஆம் தேதி திமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் .அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின், திமுகவில் இணைவது தொடர்பாக ரஜினிகாந்திடம் அவருடைய கருத்தை கேட்டோம், அவரும் உங்களுக்கு விருப்பம் என்றால் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைத்துக்கொண்டு உங்கள் பணியை தொடருங்கள் அதற்கு நான் எந்தவிதத்திலும் தடையாக இருக்க மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார் என கூறியிருக்கிறார்.

இதேபோல ரஜினியின் மக்கள் மன்றத்தை சேர்ந்த பலர் ரஜினியின் அரசியல் அறிவிப்பு ஏமாற்றம் அளித்த நிலையிலே, அவரை தொடர்பு கொண்டு நாங்கள் வேறு கட்சிக்கு போகப் போகின்றோம் என்று தெரிவிக்க அவரும் உங்களுக்கு விருப்பமான கட்சியில் இணைந்து கொள்ளுங்கள் என ஒப்புதல் அளித்திருக்கிறார்.

இந்த நிலையில், ரஜினியின் மக்கள் மன்றத்தில் இருந்து விலகிய பலர் திமுகவை நாடி செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினிகாந்தின் மக்கள் மன்றத்திலிருந்து செல்வதற்கும் ரஜினி வேறு கட்சிகளில் இணைந்து கொள்ளலாம் என்று அறிவித்ததற்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

ஒருவேளை ரஜினியும்,ஸ்டாலினும் ரகசிய கூட்டணியில் இருக்கிறார்களா? என்ற சந்தேகமும் எழுந்து இருப்பதாக சொல்கிறார்கள் .அதோடு ரஜினிக்கும், ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புறவு இருப்பதாக சொல்லப்படுவதால் ரஜினியின் அறிவிப்பிற்கும் ஸ்டாலினிற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள்.