ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தமிழக அரசியல் களம் புதிய புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த முறையும் ஆட்சியில் அமர வேண்டுமென்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திமுகவிற்கு அதன் இரண்டாம் கட்ட தலைவர்களால், இந்த ஆசை நிராசையாக மாறிவிடுமோ என்ற பயம் இருக்கிறது. ஏனென்றால், திமுக அமைசச்ரகளான கே.என். நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான முறைக்கேடு வழக்கு தேர்தல் சமயத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக திமுக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விட்டது என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு அதிமுகவிலும் அரங்கேறியுள்ளது. அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ள நிலையில் தற்போது புதிய திருப்பமாக அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான போதைப்பொருள் வழக்கை மீண்டும் நியாபகப்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட நயினாரும், விஜயபாஸ்கரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பேசிய போது, திமுக ஆட்சி காலத்தில் கஞ்சா, மதுபானம் போன்ற போதை பொருட்களின் பழக்கம் அதிகரித்து வருகிறது என்று நயினார் கூறினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், கையை மேலே காட்டி விஜயபாஸ்கரை நோக்கி குட்கா, குட்கா என்று கத்தியது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக ஆட்சி காலத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட புகாரில், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல் தவெகவின் பரப்புரையிலும் செந்தில் பாலாஜியை பற்றி விஜய் பேசிய அடுத்த கணமே விஜய் மீது செருப்பு வீசப்பட்டது. இதனையெல்லாம் வைத்து பார்த்தால் இது திமுகவின் சதி திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

