அவர்கள் அதை செய்யும் வரை இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்! முன்னாள் அமைச்சர் அதிரடி பேட்டி!

0
171

திமுகவின் அராஜகப் போக்கை கண்டிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியான அதிமுக நேற்றைய தினம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது.

இந்தப் போராட்டத்தை அந்தந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், அமைப்புச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், உள்ளிட்டோர் தலைமை தாங்கி நடத்தினர்.

அந்த விதத்தில் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது, அதேபோல கோயமுத்தூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

விலைவாசி உயர்வு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்படும் வழக்குகள் மற்றும் அவர்கள் இல்லங்களில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை உள்ளிட்டவற்றை கண்டித்தும், மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று இருந்தார்கள்.

அந்த விதத்தில் திமுக அரசை கண்டித்து மதுரை மாநகர மாவட்ட அதிமுக சார்பாக செல்லூர் 50 அடி சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது செல்லூர் ராஜு கூறியதாவது, சென்ற பத்து வருட கால அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இன்னும் ஆறு மாத காலம் கூட சரியாக ஆகவில்லை . அதற்குள் பல பகுதிகளில் கொள்ளை, கொலை என்று விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறி கொண்டு உள்ளது. பொதுமக்கள் மனதில் அச்சத்துடன் வாழும் நிலை உண்டாகி இருக்கிறது என கூறியிருக்கிறார்.

தேர்தலின்போது திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த பொது மக்களை ஏமாற்றிவிட்டு ஆட்சிக்கு வந்து அமர்ந்த திமுகவால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலவில்லை. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என தெரிவித்தார்கள், கல்விக் கடன் ரத்து என்று தெரிவித்தார்கள், எரிவாயு சிலிண்டருக்கு மானியம் கொடுப்பதாக தெரிவித்தார்கள், இது போல பல பொய்களை தெரிவித்து பொதுமக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்து விட்டார்கள்.

ஆனால் தற்சமயம் இந்த வாக்குறுதிகளை எதையுமே நிறைவேற்றவில்லை, தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Previous articleகுமரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல 3 நாட்கள் தடை விதித்த மாவட்ட நிர்வாகம்!
Next articleசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் திடீர் திருப்பம்! முக்கிய நபர் வழங்கிய சாட்சியம்!