திமுக – விசிக தொகுதி பங்கீடு.. “3+1” கிடைக்குமா?

0
343
#image_title

திமுக – விசிக தொகுதி பங்கீடு.. “3+1″ கிடைக்குமா?

திமுக மற்றும் விசிக வினரிடையே தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் விசிக மூன்று தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் கேட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி குறித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளைப் பெற்று, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விசிக தற்போது விழுப்புரம், சிதம்பரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு தொகுதிகளில் மூன்று தனி தொகுதிகளையும் பெரம்பலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய விருப்ப தொகுதிகளில் ஒரு பொது தொகுதியையும் கேட்டுள்ளது. அமைச்சர் டி ஆர் பாலு தலைமையில் நடைபெற்ற இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஏற்கனவே விசிக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் இந்த முறை மூன்று தொகுதிகள் வழங்கப்படும் என கணிக்கப்படுகிறது.

இதுவரை காங்கிரஸ், ம.தி.மு.க, சி.பி.எம், சிபிஐ ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் இதுவரை வழங்கப்பட்ட தொகுதிகளே ஒதுக்கப்படுவதாக தீர்மானிக்கப்படுவதால் விசிக-விற்கும் அதே இரண்டு தொகுதிகளை மட்டுமே வழங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்படுகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பேட்டியளித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன் ” 40 தொகுதிகளிலும் திமுக வெல்லும். கூட்டணியை தக்க வைத்துக் கொள்வதில் திமுகவை போல் வேறு எந்த கட்சியும் இல்லை. அதிமுக பாஜக கூட்டணி கட்சியின் விரிசலை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.” என கூட்டணி குறித்து கூறினார்.

இந்நிலையில் திமுக அதே இரண்டு தொகுதிகளை மட்டுமே திமுக தரும் நிலையில் திமுக-விசிக கூட்டணி இவ்வாறே நீட்டிக்குமா என்ற நிலை குறித்து விரைவில் அறிவோம்.

Previous articleஜாப் அலர்ட்: ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- ஊதியத்தில் வேலை..! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!
Next articleசிறையிலிருந்தே ராஜினாமா? முற்றிலும் அமைச்சர் பதவியை துறந்த செந்தில் பாலாஜி!