ரஜினி அல்ல அழகிரி அல்ல யார் வந்தாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பை அசைக்க முடியாது! கனிமொழி ஆவேசம்!

Photo of author

By Sakthi

மு.க .அழகிரி கட்சி ஆரம்பித்தாலும் திமுகவிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்திருக்கின்றார்.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே திமுகவில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டார் மு.க. அழகிரி அதன் பின்பு அவர் திமுகவில் மறுபடியும் இணைவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் நீர்த்துப் போயின. கலைஞர் மறைவிற்கு பின்னர் மறுபடியும் திமுகவில் இணைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டார். கலைஞரின் நினைவிடத்திற்கு தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்துச் சென்று பேரணியும் நடத்திப் பார்த்தார்.

அதைவிட ஒரு படி மேல் சென்று, திமுகவில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கவும் தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்தார். ஆனாலும் அவர் திமுகவில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மறுபடியும் தன்னுடைய வேலையை ஆரம்பித்திருக்கிறார் அழகிரி. எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி தன்னுடைய ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியில் இருந்து எனக்கு எந்தவிதமான அழைப்பும் வரவில்லை என்று தெரிவித்த அவர், திமுகவுடன் ஒன்றிணைந்து பணியாற்ற நான் தயாராக இல்லை என்று உறுதிபட தெரிவித்து இருக்கின்றார். ஆதரவாளர்கள் தெரிவித்தால் நிச்சயமாக கட்சியை ஆரம்பிப்பதாக தெரிவித்த அவர், புது கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக அவருடைய சகோதரியும் திமுகவின் மகளிரணி செயலாளர் கனிமொழி கருத்து தெரிவித்திருக்கின்றார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய கனிமொழி ஜனநாயக நாட்டில் அனைவரும் கட்சியை ஆரம்பிக்கலாம். அழகிரி உட்பட யார் கட்சியை தொடங்கினாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு சிதைந்து விடாது. திமுகவின் வெற்றி வாய்ப்பை யாராலும் அழித்துவிட இயலாது . ஆனாலும் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியுடன் இருந்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ச்சியாக அடிக்கல் நாட்டுவது ஒன்றையே வேலையாக செய்து வருகின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. எதையுமே முழுமையாக முடித்த பெருமையானது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்று தெரிவித்த கனிமொழி, திமுகவின் தேர்தல் அறிக்கை மிக சிறப்பானதாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கும். என்று தெரிவித்த அவர் பலருடைய வியூகம் திமுகவை வெற்றிபெற விடக்கூடாது என்பதுதான். ஆனாலும் யார் கட்சியை தொடங்கி என்ன வியூகம் அமைத்தாலும் சரி திமுகவின் வெற்றி வாய்ப்பை யாராலும் அசைக்க இயலாது. திமுகவின் வாக்கு வங்கி ரஜினி, அல்ல அழகிரி, அல்ல யாரு வந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைப்பதா வேண்டாமா என்பது தொடர்பாக ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார் கனிமொழி.