Home News இளம் வேட்பாளருக்கு வாய்ப்பு ஓரங்கட்டப்படும் திமுக சீனியர்! அதிர்ச்சியில் வேலூர் திமுக!

இளம் வேட்பாளருக்கு வாய்ப்பு ஓரங்கட்டப்படும் திமுக சீனியர்! அதிர்ச்சியில் வேலூர் திமுக!

0
இளம் வேட்பாளருக்கு வாய்ப்பு ஓரங்கட்டப்படும் திமுக சீனியர்! அதிர்ச்சியில் வேலூர் திமுக!

காட்பாடி தொகுதியில் வெகு காலமாகவே திமுக கட்சியின் சார்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தான் போட்டியிட்டு வருகின்றார். அவர் அந்த தொகுதியில் தொடர்ச்சியாக போட்டியிட்டாலும் பலமுறை அந்த தொகுதியில் துரைமுருகன் வெற்றி அடைந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் காட்பாடி தொகுதியை திமுகவின் கோட்டை ஆகவே அவர் மாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் 1984ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் மற்றும் 1991ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் காட்பாடி சட்டசபைத் தொகுதியில் துரைமுருகன் தோல்வியை சந்தித்தார். அந்த தொகுதியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் ,பல ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக ஒரு டாக்டர் காட்பாடி தொகுதியில் களம் இறங்க வேண்டும் என்று விருப்ப மனு தாக்கல் செய்திருக்கின்றார். இதுவரையில் திமுக சரித்திரத்தில் காட்பாடி தொகுதியில் திமுக சார்பாக துரைமுருகனை தவிர்த்து வேறு யாருமே விருப்ப மனு கொடுத்தது இல்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக துரைமுருகனுக்கு இதுவரையில் நேர்காணலும் நடத்தப்படவில்லை என்றும் தெரிய வருகிறது.

ஆனால் வெகு காலத்திற்குப் பின்னர் முதல்முறையாக துரைமுருகனை எதிர்த்து வேறொரு நபர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதால் துரைமுருகனை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேர்க்காணல் செய்தார் காட்பாடியிலேயே பிறந்து வளர்ந்த காரணத்தால் அங்கேயே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பியதால் விருப்ப மனு கொடுத்ததாக அந்த இளைஞர் தெரிவித்திருக்கிறார்.இதன் காரணமாக, காட்பாடி தொகுதியில் ஒரு இளம் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வெகு காலமாக கோரிக்கைகள் எழுந்து வந்ததை தொடர்ந்து அந்த கோரிக்கையை தற்சமயம் திமுக பரிசீலனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் கிட்டத்தட்ட 37 வருடங்களாக காட்பாடி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் துரைமுருகனுக்கு இருக்கும் செல்வாக்கு புதிதாக நிறுத்தப்படும் வேட்பாளருக்கு இருக்குமா? என்பது சந்தேகம்தான்.ஒருவேளை வயது மூப்பின் காரணமாக நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று துரைமுருகன் தெரிவித்து அவரே நேரடியாக இறங்கி பிரச்சாரம் செய்தால் புது வேட்பாளருக்கு வாக்குகள் கிடைக்கும் என்று கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஆனாலும் துரைமுருகனை ஓரம்கட்டிவிட்டு தற்சமயம் திமுக இளம் வேட்பாளர் பற்றி பரிசீலனை செய்து வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து துரைமுருகன் வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.கிட்டத்தட்ட வேலூர் மாவட்டத்தில் திமுக என்றாலே அது துரைமுருகன் தான் என்ற அளவிற்கு அந்த மாவட்டத்தில் துரைமுருகனின் செல்வாக்கு பரந்து விரிந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நபரை ஓரங்கட்டிவிட்டு புதிய வேட்பாளரை நிறுத்துவதற்கு திமுக திட்டமிட்டு வருவதாக சொல்கிறார்கள்.அப்படி ஒருவேளை வேலூர் மாவட்டத்தில் துரைமுருகன் ஓரம்கட்டப்பட்டாரானால் நிச்சயமாக அந்த தொகுதியில் மட்டும் இல்லை, அந்த மாவட்டத்திலேயே திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது என்று தெரிவிக்கிறார்கள் துரைமுருகனின் அபிமானிகள்.