DMK TVK: கடந்த சில நாட்களாகவே கரூர் துயரம் குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. ஒரு அரசியல் தலைவரின் பிரச்சாரத்திற்கு 41 உயிரிழப்புகள் ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த சம்பவத்திற்கு தவெக தரப்பினர் மீது கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் பாஜகவும், திமுகவும் தனி தனி குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையின் முடிவு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லையென்றும், இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என்றும் கூறியிருந்தது. இந்த கரூர் சம்பவம் விஜய்க்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை பயன்படுத்தி கொண்ட திமுக அரசு ஒரு பிரச்சாரத்தை எவ்வாறு நடத்த வேண்டும், வழிகாட்டி நெறிமுறைகளை எப்படி வகுக்க வேண்டும் என்பது குறித்தும், கூட்ட நெரிசல் மரணத்தை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் திட்டம் வகுக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் குழு அமைத்தது, தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது போன்ற நடவடிக்கைகளை விஜய்க்கு எதிராக தான் செய்து வருகிறோம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது திமுக. தமிழகத்தில் எத்தனையோ மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது, அதற்கெல்லாம் தீவிர விசாரணையை மேற்கொள்ளாத திமுக கரூர் சம்பவத்தில் மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டி வருகிறது என்ற கேள்வியை சிலர் முன் வைக்கின்றனர். கரூர் துயரத்திற்கு பிறகு நிகழும் திமுகவின் ஒவ்வொரு அசைவும், விஜய்யை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் தான் உள்ளது என்றும் கூறப்படுகிறது.