விஜய்யின் கூட்டம் கண்டு பதறிய ஸ்டாலின்.. தி.முக போடும் அரசியல் கணக்கு!!

0
285
dmks-next-political-account-plans-to-push-back-t-v-k
dmks-next-political-account-plans-to-push-back-t-v-k

T.V.K D.M.K: கட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே அதிகளவு தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் கவர்ந்த விஜய், வெற்றி பெறுவதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக மாநாடுகளையும் , தேர்தல் பிரச்சாரங்களையும் முன்னெடுத்துள்ளார். எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத கூட்டம் விஜய்யின் பரப்புரைக்கு கூடியது.

தமிழக வெற்றிக் கழகம் முன்னேறி வருவது திமுக-விற்கும் அதிமுக-விற்கும் மிக பெரும் சவாலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் வளர்ச்சியை தடுக்க திமுக பல்வேறு உத்திகளை கையாள்வதாக சொல்லப்படுகிறது. முதலில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய் பிரச்சாரம் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அவருடைய பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.

அடுத்து கரூரில் முத்தமிழ் விழாவும் கொண்டாட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக முதலில் மக்களிடம் நேரடி தொடர்பை வலுப்படுத்தும் விதமாக “உங்களுடன் ஸ்டாலின்” பிரசாரத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளனர். இதன் மூலம் மக்களின் வீட்டு வாசலில் சென்று நேரடியாக அரசு திட்டங்களை அறிமுகம் செய்தல், குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் முகாம்கள் போன்ற முயற்சிகளை கையில் எடுத்துள்ளது.

அடுத்தாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்களை முன்னிலைப் படுத்துவது, மாதந்தோறும் உதவித்தொகை போன்றவற்றை தனது ஆயுதங்களாக பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், திராவிட மாடல் 2.0 என்ற பெயரில் அடுத்தடுத்த வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து, விலைவாசி குறைப்பு, சுகாதார வசதி, விவசாய நலத்திட்டங்கள் போன்ற தளங்களில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முயற்சிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் தவெக பிரச்சாரத்திற்க்கு அனுமதி தராமல் தொடர்ந்து மறுத்து வந்தது. இதற்கு பதிலடி கொடுத்த விஜய் தவெக-வின் வளர்ச்சியை தடுக்க ஆளுங்கட்சி இது போன்ற சூழ்ச்சியை செய்து வருகின்றது. யாராலும் எங்களின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று கூறி இருந்தார். எதிர்கட்சிகளுக்கு கூட இல்லாத கட்டுப்பாடுகளும், அனுமதி மறுப்பும் புதிதாக உதயமாகி உள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும் ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுக விதிக்கும் கட்டுபாடுகளும், தேர்தல் பிரச்சாரங்களும் விஜய்யை மையமாக வைத்தே இயங்குகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. தவெக-வின் எழுச்சியை கட்டுபடுத்தவும், வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் திமுக தீவிரமாக தயாராகி வருகிறது.

Previous articleதொடரும் அ.தி.மு.க பிரிவினை.. தி.மு.க-வில் இணைந்த முக்கிய புள்ளி!
Next articleபாஜக தந்த ஐடியா.. சைலன்டான செங்கோட்டையன்!! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!!