ADMK DMK: 2026 யில் நடைபெற போகும் தேர்தலுக்காக மாநில கட்சிகள் தேர்தல் வேட்டையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக இந்த முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்ற நோக்கிலும், இபிஎஸ் பதவியேற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுக இம்முறை வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் பாமகவும், தேமுதிகவும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று ஆலோசித்து வருகின்றன.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற திமுக கடந்த தேர்தலில் தோல்வியுற்ற இடங்களில் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை தொகுதி வாரியாக நியமித்து அந்த பகுதியில் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சென்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற இடமான நெல்லையில் இந்த முறை திமுக தோல்வியுற்றால் அங்குள்ள திமுக அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில், நெல்லையில் இபிஎஸ்யால் நெல்லை மாநகர் மாவட்ட அமைப்பில், பெரும்பாலான நிர்வாகிகள் மாற்றப்பட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக பாலை தெற்கு பகுதி செயலாளர் திருட்டு சின்னதுறை உட்பட பல முக்கிய பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நெல்லையில் வெற்றி பெற வேண்டுமென்று தீவிரமாக செயல்பட்டு வரும் திமுகவிற்கு இது அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. இபிஎஸ்யின் இந்த செயலே திமுகவின் வெற்றியை உறுதி செய்து விட்டது என்று பலரும் கூறி வருகின்றனர்.

