அம்மாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் இட கூடாதவைக்காண காரணங்கள்?

0
313

அறிவியலின்படி அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வருவதே ஆகும். அந்நாளில் காந்த சக்திகள் பூமியில் அதிகமாக இருக்கும்.இதனாலேயே நம் முன்னோர்கள் நெகட்டிவ் எனர்ஜி அதிகமாக இருப்பதனால் அந்நாளில் கட்டாயம் கோயிலுக்கு சென்று சென்று வர வலியுறுத்தினர்.

கோவிலில் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருப்பதால் இந்த அமாவாசை அன்று வெளிவரும் எதிர்மறை ஆற்றலை சமன் செய்யும்.அமாவாசையன்று செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும் எந்த தெய்வங்களை வழிபட வேண்டும் என்பதனைப் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

அம்மாவாசையன்று செய்யக்கூடாதவை?

அம்மாவாசை தினத்தன்று வீட்டு வாசலில் கோலம் இடுவது கூடாது.அமாவாசை அன்று நமது இறந்த முன்னோர்கள் நம் வீட்டிற்கு வருவர் இன்று நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.வீட்டு வாசலில் கோலமிடுவதால் நம் முன்னோர்கள் வருவது தடுக்கப்பட்டு நமக்கு முன்னோர்களின் ஆசி கிடைக்கப்பெறாமல் போய்விடும் என்பதற்காக வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது என்று கூறுவர்.

அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.அன்று காந்த சக்தி அதிகமாக இருப்பதால் எண்ணெய் தேய்த்து குளித்தால் நம் உடலுக்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

அம்மாவாசை அன்று கணவன் மனைவி உறவு கூடாது.பிறக்கும் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது என்று நம் முன்னோர்கள் கூறிய வாக்காகும்.

அமாவாசை அன்று புதிய வாகனங்களோ அல்லது தங்க நகைகளோ வாங்க கூடாது.

அமாவாசையன்றும் அமாவாசைக்கு அடுத்த நாளும் எந்த சுபகாரியங்களும் செய்யக்கூடாது.

அம்மாவாசை அன்று அதிக நேரம் தூங்கக் கூடாது.

அமாவாசை ன்று செய்யக்கூடியவை?

அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்கு அதாவது காகத்திற்கு உணவளிக்க வேண்டும்.

அமாவாசைக்கு முதல் நாளே வீடுகளை சுத்தம் செய்து அமாவாசை அன்று தலை உடன் நீராடவேண்டும்.

அமாவாசை அன்று கோவிலுக்கு சென்று அல்லது வீட்டிலோ தீபமேற்றி இறைவனுக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.

அமாவாசை அன்று திருஷ்டி கழித்தால் நல்ல பலன்களை தரும்.

அமாவாசை என்று வீண் விரயங்கள் கூடாது.

அம்மாவாசை அன்று வழிபட வேண்டிய தெய்வங்கள்?

அமாவாசை அன்று சிவபெருமானையும் காளி தேவியையும் வணங்கி வந்தார் நம் வீட்டில் செல்வ செழிப்பு பெருகும்.

Previous articleசளித் தொல்லையிலிருந்து விடைபெற இனி மாத்திரை மருந்து வேண்டாம்
Next articleInhaler- யை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான இயற்கை மருத்துவம் இதோ!