திமுக தலைமை தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு போட்ட ரகசிய உத்தரவு!

Photo of author

By Sakthi

இந்துக்களுக்கு பாஜக ஒன்றும் அத்தாரிட்டி கிடையாது என தெரிவித்து திமுக அரசு இந்து மக்களுக்கு செய்த பல விஷயங்களைப் பட்டியலிட்டு கடைசியில் ஆரியத்தை வேறு இருக்க வந்த திராவிட வாரிசுகள் நாங்கள் என்று சமீபத்தில் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இந்து மக்களாகிய தமிழர்களுடைய உரிமைகளுக்காக போராடும் ஒரு கட்சி திமுக என்று ஒருபுறம் தெரிவித்துவிட்டு ஆரிய ஆதிக்கத்தை வேரறுப்போம் என பாஜகவை எச்சரித்து இருக்கின்றார்.

சமீப காலமாக தமிழ்நாட்டில் இந்து மக்களுடைய நலனுக்காக திமுக என்ன செய்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பலபேர் பேசிவருகிறார்கள் ஆனாலும் இது போல பேச வேண்டிய அவசியம் இதற்கு முன்பு திமுகவிற்கு ஏற்படவில்லை இவ்வாறு பேசுவது எதிர்காலத்தில் திமுகவிற்கு சாதகம்தானா அல்லது பாஜகவிற்கு லாபம் அளிக்குமா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனாலும் இது தொடர்பாக திமுகவின் தலைமை ஒரு புதிய உத்தரவை தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு பிறப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது சட்டசபை தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,500 பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவதற்காக திமுக திட்டமிட்டிருக்கின்றது கட்சியுடைய பிரபலங்கள் பங்கு பெறும் பிரச்சாரத்தில் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் அவர்களை அவமதிக்கும் செயலிலும் ஈடுபடக்கூடாது என்று கட்சியின் தலைமை அறிவுறுத்தி இருக்கிறது அதோடு இந்துக்கள் அதிகமாக இருக்கின்ற பகுதிகளில் திமுகவோ அல்லது அதன் தலைவர்களோ இந்து மதத்திற்கு எதிரானவர்கள் கிடையாது என்பதை கடந்த கால நிகழ்வை சுட்டிக்காட்டி பேசுவதற்கும் உத்தரவிட்டு இருக்கிறார்கள்.