இந்தா சொல்லிட்டாருல்ல கவிஞரு! ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய வைரமுத்து!

0
149

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா அரசு கல்லூரியில் இந்து மற்றும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கே முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து அந்த கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். இந்த தடையை மீறி அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தார்கள். அவர்களை கல்லூரியின் நுழைவாயிலிலேயே முதல்வர் தடுத்து நிறுத்தினார்.

இதனை கண்டிக்கும் விதமாக அந்த மாணவிகள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். முஸ்லிம் மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு அணிந்து வந்தார்கள்.

இதன் காரணமாக, இந்த விவகாரம் சர்ச்சையை உண்டாக்கியது. இது கர்நாடகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஒரு மாபெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டது. இந்திய எல்லையைக் கடந்து மற்ற நாடுகளில் இது தொடர்பாக பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கவிஞர் வைரமுத்து தன்னுடைய வலைப்பதிவில் கல்வியின் நோக்கங்கள் ஒன்று தான் பிரிந்து கிடக்கும் சமூகத்தை ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ப்பது ஒன்றுபட்ட சமுதாயத்தை இரண்டு படுத்துவதல்ல என தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஆடை என்பது மானம், எந்த ஆடை என்பது உரிமை, இரண்டையும் பிரிக்க வேண்டாம் இஸ்லாம் என்பது இந்தியாவில் தான் சிறுபான்மை என்று பதிவிட்டிருக்கிறார்.

Previous articleபெரும் அதிர்ச்சி காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை! ஆளும் கட்சியின் அழுத்தம்தான் காரணமா? காவல்துறையினர் தீவிர விசாரணை!
Next articleஎன்ன புதிய தொற்றா? உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது?