இதை உடனே செய்யுங்கள் இல்லன்னா அவ்வளவுதான்! டாஸ்மாக் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
118

தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார் டெண்டர் புதிய விதிகளை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அதில் ஏற்கனவே பார் வைத்திருப்பவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை எனவும், நிலத்தின் உரிமையாளர்கள் தடையில்லா சான்றிதழ் ஏற்கனவே தங்கள் பெற்றிருப்பதாகவும் ஆனாலும் தங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமையும் வழங்கப்படவில்லை என்றும், கூறியிருந்தார்கள்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் பார் உரிமையாளர்கள் சார்பாக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதோடு அவர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

அதோடு டாஸ்மாக் மதுபான கடைகளையொட்டி அமைக்கப்படும் பார்களில் மது அருந்த தமிழக மதுவிலக்கு சட்டம் அனுமதிக்கவில்லை என்றும், தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மேலும் டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பார்களை நடத்துவதற்கு இந்த சட்டம் எந்தவிதமான அனுமதியும் வழங்கவில்லை என்று கூறியிருக்கிறார் நீதிபதி.

Previous articleவிற்பதற்கு மட்டுமே அனுமதி! அதை இணைத்து நடத்துவதற்கு அல்ல!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!
Next articleபச்சை மறைந்து வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் புல்வெளிகள்! காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!! காரணம் என்ன?