சூரியக்குமாரின் பேட்டிங்கை தடுக்க இத பண்ணுங்க! யோசனை கொடுத்த இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்!!

0
114
#image_title
சூரியக்குமாரின் பேட்டிங்கை தடுக்க இத பண்ணுங்க! யோசனை கொடுத்த இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்!
மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் சூரியக்குமார் யாதவ் அவர்களின் பேட்டிங்கை தடுக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர்கான் அவர்கள் யோசனை வழங்கியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியக்குமார் யாதவ் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் தொடங்கிய பொழுது மோசமாக விளையாடிய சூரியக்குமார் யாதவ் கடந்த சில போட்டிகளில் மிக அருமையாக விளையாடி வருகிறார். பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சூரியக்குமார் யாதவ் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தார்.
இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர்கான் அவர்கள் சூரியக்குமார் யாதவ் அவர்களின் பேட்டிங்கை குறித்து பேசியுள்ளார். சூரியக்குமார் யாதவ் அவர்களின் சமீபத்திய ஆட்டங்கள் குறித்து பேசிய ஜாஹிர்கான் அவர்கள் “சூரியாவின் பேட்டிங்கை தடுக்க அவரது கையில் இருக்கும் பேட்டை பிடுங்க வேண்டும். அல்லது கைகளை பிடிக்க வேண்டும் அல்லது அவருடைய கால்களை கட்டிப் போடவேண்டும்” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான வெற்றிகளுக்கு சூரியக்குமார் யாதவ் அவர்களின் பேட்டிங்கும் காரணம்.