பெண்களே தலைமுடி வேகமாக வளர வேண்டுமா? அதற்கு இந்த தேநீர் குடிங்க!
பெண்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஆசை என்னவென்றால் தலைமுடி நீளமாக அடர்த்தியாக அதே சமயம் கருமையாக வளர வேண்டும் என்பதுதான். அந்த வகையில் இந்த பதிவில் தலைமுடி கருமையாக அடர்த்தியாக நீளமாக வளர என்ன டீ குடிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பலரும் தலைமுடி பிரச்சனைகளுக்கு பலவிதமான சிகிச்சைகளையும், மருந்துகளையும், மாத்திரைகளையும் கொடுக்கிறார்கள். இதனாலும் தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றது. மேலும் மோசமான வாழ்க்கை முறையும் தலைமுடி பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த பதிவின் மூலமாக தலைமுடி பிரச்சனைக்குஉதவும் ஆரோக்கியமான டீ தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* நெல்லிக்காய் பொடி
* வெந்தயம்
* கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு. டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் 3 அல்லது 4 கறிவேப்பிலை இலைகளை எடுத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் கால் டீ ஸ்பூன் அளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இறுதியாக இதில் ஒரு. டீஸ்பூன் அளவு நெல்லிக்காய் பொடியை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்கு கொதித்த பின்னர் அடுப்பை அனைத்து விட வேண்டும். பின்னர். இதை வடிகட்டி குடிக்கலாம். இந்த டீயை தினமும் குடித்து வந்தால் தலைமுடி கருமையாக வளரும். அதே போல அடர்த்தியாகவும் நீளமாவகும் வளரும்.