கொரோனா மாதாவின் அருள் கிடைக்குமா? ஆர்வத்தில் மக்கள்!

Photo of author

By Hasini

கொரோனா மாதாவின் அருள் கிடைக்குமா? ஆர்வத்தில் மக்கள்!

கடந்த ஒன்றரை வருடமாகவே நாடே கோரோனாவிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு உள்ளது. அந்த வைரசிடம் இருந்து மக்களும், அரசும் என்னதான் முயற்சி செய்தாலும் வைரஸ் என்னமோ நம்மை விட்ட பாடில்லை.

தற்போது அவசர கால நடவடிக்கையாக நம்மை வைத்து தடுப்பூசி என்கிற பேரில் மருந்து தயாரிப்பாளர்கள் வளர்ந்து கொண்டு உள்ளனர். எனவே நம்மை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடும், நம்பிக்கையோடும் இருங்கள் வெல்லலாம் கோரோனாவை.

வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ஒரே வழியாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடம் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே மூடநம்பிக்கைகளும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோயம்புத்தூரில் கடந்த மாதம் கொரோனா தேவி  என்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.

1.5 அடி உயரம் கொண்ட இந்த சிலை காமாட்சிபுரி ஆதினம் சார்பில் அமைக்கப்பட்டது. கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த கொரோனா தேவி  சிலைக்கு தினசரி பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூரில் கோரோனா தேவி  சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக உத்தரபிரதேச மாநிலத்திலும் கோரோனா மாதா என்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சுல்லாப்பூர் கிராமத்தில் கொரோனா மாதா  என்ற பெயரில் சிலை ஒன்றை அக்கிராம மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைத்துள்ளனர்.

கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.  அந்த கொரோனா மாதா  முகக்கவசம் அணிந்திருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா மாதா சிலைக்கு புனித நீர் தெளித்தும், மலர்களை சூடியும் கிராம மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

எப்படியோ கொரோனா குறைந்தால் சரி என்றுதான் அனைவரும் எதிர்பார்க்கிறோம். கொரோனா தேவியோ அல்லது கொரோனா மாதாவோ நோய் தொற்று குறைந்து அனைவரும் நலமுடன் இருந்தால் சரிதான்.