நமது வீடுகளில் பணத்தட்டுப்பாடு குறைந்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக புத்தர் சிலையை வாங்கி வைத்திருப்போம். ஒரு சிலர் இதனை குபேரர் சிலை என்றும் கூறுவர். இந்த புத்தர் சிலையினை சிரிக்க கூடியது போன்றுதான் பெரும்பாலும் அனைவரும் வாங்கி வைத்திருப்போம். இதனை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது. நீங்கள் பூஜை அறையில் வைத்திருந்தால் அதனை கண்டிப்பாக எடுத்து வீட்டின் ஹாலில் அல்லது சமையலறையில் வைத்து விட வேண்டும்.
இந்த சிலையினை வீடுகளில் மட்டுமல்லாமல் அலுவலகங்கள், தொழில் செய்யும் இடம், கடைகள் போன்ற அனைத்து இடங்களிலும் வருமானம் பெருக வேண்டும் என வைத்திருப்போம். இந்த சிலையினை நாம் வைத்துக் கொண்டால் நேர்மறையான எண்ணம் மற்றும் பணவரவு அதிகரிக்கும் என்று நாம் அனைவரும் வாங்கி வைத்திருப்போம். இந்த புத்தர் சிலையினை வைப்பதற்கு என ஒரு வாஸ்து அமைப்பும், முறையும் உள்ளது. அதற்கு ஏற்ப வைத்தால் மட்டுமே அதற்கான பலனை நாம் பெற முடியும்.
நமது வீடுகளில் ஏதேனும் விசேஷம் செய்கிறோம் என்றால் நமது உறவினர்கள் பெரும்பாலும் இந்த புத்தர் சிலையை தான் பரிசாக வழங்குவார்கள். எனவே நமது வீட்டில் அதிகம் இந்த புத்தர் சிலை இருக்கிறது என்பதற்காக வீட்டில் பல இடங்களில் வைத்திருப்போம். ஒரு சில வீடுகளில் இந்த புத்தர் சிலையினை நாம் குனிந்து எடுக்கும்படி கீழே வைத்திருப்பர். ஆனால் அவ்வாறு கீழே வைக்கக்கூடாது. புத்தர் சிலையை எப்பொழுதும் அலமாரிகள் போன்ற இடங்களில் மட்டுமே, அதாவது நேராக பார்க்கும்படி தான் மேல் பகுதியில் இருக்க வேண்டும்.
இந்த புத்தர் சிலையினை சுற்றிலும் சுத்தமாக இருக்க வேண்டும். நாம் அலமாரிகளில் இந்த புத்தர் சிலையை வைத்தால் அதன் அருகில் புத்தகங்கள், மற்ற ஏதேனும் பொருட்கள் போன்றவற்றை அதற்கு அருகிலேயே குப்பை போல வைத்து விடுவோம். அவ்வாறு வைத்திருக்காமல் சுத்தமாக வைத்தால் மட்டுமே நேர்மறையான ஆற்றல்களை அந்த புத்தர் சிலை நமக்கு கொடுக்கும். அதேபோன்று எலக்ட்ரானிக் சாதனத்தின் மீதும் இந்த சிலையை வைக்கக்கூடாது. பிரிட்ஜ் ஆனது உயரமாக இருக்கிறது என்பதற்காக ஒரு சிலர் பிரிட்ஜின் மேல் வைத்திருப்பர். ஆனால் அவ்வாறு வைக்க கூடாது.
இந்த புத்தர் சிலையினை நமது வீட்டின் உள்ளே நுழையும் போதே அந்த சிலையை பார்க்கும்படி வைக்க வேண்டும். அதிலும் கிழக்கு புறமாக அந்த சிலை பார்த்தவாறு இருக்க வேண்டும். அதேபோன்று நமது வீட்டின் சமையலறையில் தென்கிழக்கு திசையில் இந்த சிலையினை வைக்கலாம். தெற்கு திசையை நோக்கியவாறு மட்டும் இந்த சிலையை வைக்கக்கூடாது. ஏனென்றால் இறந்தவர்களின் படத்தை தான் தெற்கு பார்த்தவாறு வைப்பார்கள். எனவே அந்த திசையில் புத்தர் சிலையை வைக்கக் கூடாது.
அதேபோன்று நமது குழந்தைகள் படிக்கக்கூடிய டேபிளின் மீது இதனை வைத்தால் கவனிச்சிதைவு ஏற்படாமல் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். இந்த புத்தர் சிலை நமது வீட்டில் இருப்பதனால் மன அமைதி, பணவரவு, நேர்மறையான ஆற்றல்கள், அதிர்ஷ்டம் ஆகிய அனைத்துமே நமக்கு கிடைக்கும்.