பழைய 50 ரூபாய் மற்றும் 5ரூபாய் நோட்டுகள் ஆன்லைன் சந்தையில் அதிக மதிப்புடையது. இதனை விற்பனை செய்வதன் மூலம் பல லட்சம் கணக்கில் பணம் கிடைக்கும். ஆனால் இதுபோன்ற விற்பனைகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கவில்லை என முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
பழைய நாணயங்களுக்கு இந்த காலகட்டத்தில் விலை மதிப்பு மிக அதிகம் என சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த பழைய நோட்டுகளை விற்பனை செய்யும் போது அதிக லாபம் கிடைக்கும் என தகவல்கள் வருகிறது. 10 ரூபாய் நோட்டில் சீரியல் நம்பர் ஜீரோ என இருந்தால் அதன் மதிப்பு சுமார் 10 லட்சம் வரை கிடைக்கும் எனவும், மேலும் Coin Bazaar, Quikr போன்ற இணையதளத்தில் விற்று அதிக லாபம் ஈட்ட முடியும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்னொரு தகவல் வெகுவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது 50 ரூபாய் நோட்டுகளில் சீரியல் எண் 786 என்று இருந்தால் அதற்கு சுமார் 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை கிடைக்கும் என தகவல் வந்துள்ளன. மேலும் அந்த நோட்டில் முன்பக்கம் மகாத்மா காந்தியின் புகைப்படம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முக்கிய காரணம் சர்வதேச சந்தையில் 50 ரூபாய் நோட்டுக்கு தேவை அதிகரித்து வருகிறது. இது மட்டும் அல்லாமல் வரிசை எண் 786 முஸ்லிம் சமூகத்தில் மிக புனிதமானதாக கருதப்படுவதால் இதை சந்தையில் வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

