பொதுவாக நம் உடம்பில் இருக்கும் தோல்களை காட்டிலும் முகத்தில் இருக்கும் தோல் ஆனது மிகவும் லேசானதாக இருக்கும். அதிலும் கண்களுக்கு கீழே உள்ள தோல் ஆனது அதைவிடவும் லேசானதாக இருக்கும். மற்ற தோள்கள் அனைத்தும் எவ்வாறு கருப்பு நிறமாக மாறுகிறதோ அதனை காட்டிலும் மிக விரைவாக இந்த கண்களுக்கு கீழ் உள்ள தோலானது கருப்பு நிறமாக மாறிவிடும். இதனை தான் கருவளையம் என்று கூறுகிறோம்.
இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழித்து தூங்காமல் இருப்பதாலும், அதிகமாக மொபைல் ஃபோன்களை உபயோகப்படுத்துவதாலுமே கருவளையம் வருவதாக நாம் நினைத்து உள்ளோம். அதனை காட்டிலும் இன்னும் பல காரணங்கள் கருவளையம் வருவதற்கான காரணமாக உள்ளது. நமது உடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலோ, அதிகமான மன உளைச்சலுக்கு ஆளானாலோ, நமது குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தாலும் கூட நமக்கும் கருவளையம் வரும் என்றும் பலவிதமான காரணங்கள் கூறப்படுகிறது.
அதேபோன்று கண்களை அதிகமாக தேய்ப்பதாலும், வயது ஆக ஆக தோல் சுருங்குவதாலும், சூரிய ஒளியினாலும், போதை பழக்கத்திற்கு ஆளானாலும், கண்களுக்கு போடக்கூடிய மேக்கப் பொருட்கள் ஏதேனும் சேராமல் இருந்தாலும் கருவளையம் வருவதாக கூறப்படுகிறது.
நமது உடம்பில் ரத்தம் குறைவாக இருந்தாலும், அனிமியா போன்ற நோய்கள் இருந்தாலும், நமது உடம்பில் விட்டமின் C,E,K போன்றவை குறைவாக இருந்தாலும் கருவளையம் வருவதாக கூறப்படுகிறது.
இவற்றுள் சத்து குறைபாட்டினால் கருவளையம் ஏற்பட்டிருந்தால் கருவளையத்துடன் முடி உதிர்வது, உடல் சோர்வாக இருப்பது போன்றவைகளும் ஏற்படும். இவ்வாறு இருப்பவர்கள் மருத்துவரை உடனடியாக அணுகி சத்து குறைபாட்டினை நீக்கிக்கொள்ள வேண்டும்.
சத்து குறைபாட்டினால் கருவளையம் ஏற்படாமல் இருந்தால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கிக் கொள்ளலாம்.
1. டீ பேக்: இரண்டு டீ பேக்குகளை எடுத்து 5 நிமிடம் சுடு தண்ணீரில் வைத்த பின்னர் அதனை எடுத்து நமது வீட்டின் பிரிட்ஜில் உள்ள பிரீசரில் 20 நிமிடம் வைக்க வேண்டும். பின்பு அதனை எடுத்து நமது கண்களில் வைப்பதாலும் கருவளையம் சரி செய்யப்படும்.
2. ஸ்பூன்:நமது வீட்டில் உள்ள 2 ஸ்பூன்களை எடுத்து 20 நிமிடம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். அது குளிர்ச்சி அடைந்த பின்னர் எடுத்து நமது கண்களில் வைப்பதன் மூலமும் கருவளையம் குறையும். குளிர்ச்சியான பொருளை வைப்பதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக்கப்படுவதால் கருவளையம் சரி செய்யப்படுகிறது.
3. கற்றாழை: இரவில் படுப்பதற்கு முன்பு சிறிது கற்றாழையை எடுத்து கருவளையம் உள்ள இடத்தில் தேய்த்து விட்டு காலையில் எழுந்து அதனை கழுவுவதன் மூலமும் கருவளையம் சரி செய்யப்படுகிறது. கற்றாழையில் அலோசின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் அது கண்களை குளிர்ச்சியாகவும், கண்கள் வீக்கம் அடையாமலும் பார்த்துக் கொள்கிறது.
4. வெள்ளரிக்காய்: இரண்டு வெள்ளரிக்காய் துண்டுகளை எடுத்து கண்களில் வைப்பதன் மூலமும் கருவளையம் குணமாகும்.