உங்கள் கை கால்களில் கருமையான நிறம் உள்ளதா? அப்போ பேக்கிங் சோடாவை இப்படி பயன்படுத்துங்க!!
நம்முடைய கைகள் மற்றும் கால்களில் உள்ள கருமையான நிறத்தை மறையச் செய்ய பேக்கிங் சோடாவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து.இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய கைகளில் உள்ள முட்டிகளிலும் சரி கால்களில் உள்ள முட்டிகளிலும் சரி. கருமையான நிறங்கள் இருக்கும். இந்த கருமையான நிறங்கள் ஒரு சிலருக்கு உடல் எடை அதிகரிப்பினால் வரலாம். ஊட்டச்சத்துக்கள் குறைபாடு காரணமாக வரலாம். இந்த கருமையான நிறத்தை எவ்வாறு மறையச் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* பேக்கிங் சோடா
* சர்க்கரை
* எலுமிச்சை
செய்முறை…
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேவையான. அளவு பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதில எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
நன்கு கலந்துவிட்ட பின்னர் இதை கைகள் மற்றும் கால்களில் கருமையாக இருக்கும் இடங்களில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழிந்து கழுவி விட வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் கருமையான நிறம் மறைந்து கைகள் மற்றும் கால்கள் அனைத்தும் முகத்தின் நிறத்திற்கு மாறும்.