துளசியை எந்த நாட்களில் செடியிலிருந்து பறிக்கக் கூடாது என்று தெரியுமா..??

Photo of author

By Janani

துளசியை எந்த நாட்களில் செடியிலிருந்து பறிக்கக் கூடாது என்று தெரியுமா..??

Janani

துளசி என்பது வழிபாட்டு பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒரு பொருளாகும். இந்த துளசி செடியை நமது வீட்டில் வைத்து தினமும் வழிபட்டும் வருகிறோம். இந்த துளசி செடியை வீட்டிற்கு உள்ளே வளர்க்கக் கூடாது. வீட்டிற்கு முன்பாக அல்லது பின்புறமாக தான் வளர்க்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

இவ்வாறு நாம் தினமும் வழிபடக்கூடிய துளசி செடியிலிருந்து ஒருபோதும் துளசியை எந்த நாட்களிலும் பறிக்கக்கூடாது. நமது வீட்டின் பூஜைக்காக அல்லது கோவிலுக்கு எடுத்துச் செல்ல துளசி வேண்டும் என்றால் அதற்காக தனியாக ஒரு துளசி செடியை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, நாம் தினமும் விளக்கேற்றி வழிபடக்கூடிய துளசி செடியிலிருந்து ஒருபோதும் துளசியை பறிக்க கூடாது.

இவ்வாறு கடவுளுக்கு நாம் வைத்து வழிபடுவதற்கு என, ஒரு துளசி செடியை தனியாக வைத்து வளர்த்தாலும் கூட, எல்லா நாட்களிலும் அந்தச் செடியிலிருந்து துளசியை பறிக்கக் கூடாது. குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மட்டுமே இந்த துளசியை பறிக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது.

கிரகண நேரத்தில் துளசியை பறிக்கக் கூடாது. அது சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி, சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி அந்த கிரகண நேரத்தில் துளசியை பறிக்கக் கூடாது. கிரகண நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ தான் துளசியை பறிக்க வேண்டும்.

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களிலும் துளசியை பறிக்கக் கூடாது. அதேபோன்று ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் துளசியை பறிக்கக் கூடாது. இது மட்டுமன்றி அனைத்து நாட்களிலும் மதியம் 12 மணிக்கு மேல் துளசியை பறிக்கக் கூடாது.

அதிலும் குறிப்பாக மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு வைத்த பிறகு கண்டிப்பாக துளசியை பறிக்கக் கூடாது. அதேபோன்று வருடப்பிறப்பு மற்றும் தமிழ் மாதங்களின் பிறப்பு நாட்களில் துளசியை பறிக்கக் கூடாது.

வீட்டில் யாருக்கேனும் இறந்தவர்களுக்காக திதி கொடுக்கிறோம் என்றால் அந்த நாட்களிலும் துளசியை பறிக்கக் கூடாது. திருவோண நட்சத்திரத்தின் பொழுதும் இந்த துளசியை பறிக்கக் கூடாது.

சப்தமி, அஷ்டமி, ஸ்வாதசி, சதுர்த்தசி, ஏகாதசி இதுபோன்ற திதிகளின் பொழுதும் துளசியை பறிக்கக் கூடாது. ஆகவே இது போன்ற நாட்களில் துளசியை பறிக்காமல் மற்ற நாட்களில் துளசியை பறித்துக் கொள்ளலாம்.

ஒருவேளை முன்பாகவே பறித்து வைத்திருந்த துளசி வாடி இருந்தால், அதனை கடவுளுக்கு பயன்படுத்தலாமா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். துளசிக்கு நிர்மால்ய தன்மை உண்டு. அதாவது துளசி வாடி இருந்தாலும், காய்ந்த நிலையில் இருந்தாலும் பயன்படுத்தாத துளசி என்றால், அதனை பூஜைக்கு தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே நமக்கு கிடைக்கின்ற சமயத்தில் இந்த துளசியை பறித்து சேகரித்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் துளசியை கத்தரிக்கோல் மற்றும் நமது நகங்களைக் கொண்டு பறிக்கக் கூடாது. துளசியை கடவுளிடம் வேண்டிக் கொண்ட பின்பு மிகவும் மென்மையான முறையில் பறிக்க வேண்டும்.