இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன தெரியுமா! உண்மையை கூறிய ஆகாஷ் சோப்ரா! 

Photo of author

By Sakthi

இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன தெரியுமா! உண்மையை கூறிய ஆகாஷ் சோப்ரா!
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்ததற்கு என்ன காரணம் என்பதை ஆகாஷ் சோப்ரா அவர்கள் தற்பொழுது கூறியுள்ளார்.
சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடர். மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இதில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் தலைமையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரை அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணியால் ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியவில்லை.
இதற்கு காரணம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் தான் என்று கூறப்படுகின்றது. இந்த ஒருநாள் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா அவர்களை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. மூன்று போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு அரைசதம் உள்பட 157 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடாத காரணத்தால் இந்திய அணி 27 வருடங்களுக்கு பிறகு இலங்கை அணியிடம் ஒரு நாள் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா அவர்கள் இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான இரண்டு பேட்ஸ்மேன்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா அவர்கள் “இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை அளிக்கின்றது. இந்திய அணியில் விராட் கோஹ்லி அவர்களின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக விராட் கோஹ்லி அவர்கள் மூன்று போட்டிகளிலும் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அது மட்டுமில்லாமல் விராட் கோஹ்லி அவர்கள் ரிவியூவ்வை தேவையில்லாமல் எடுத்து வீணடித்தார். விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடுவார் என்று எதிர் பார்த்தோம். ஆனால் அவரால் இந்த ஒருநாள் தொடரில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
அதே போல சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இரண்டு முறை ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் வேகப்பந்து வீச்சாளருக்கு ஒரு முறையும் ஆட்டமிழந்துள்ளார். இருவரும் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்தை தவறாக எதிர்கொண்டு ஆட்டமிழந்தது தெளிவாக தெரிகின்றது.
இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார்கள் என்று கூறப்படுகின்றது. அப்படி இருக்க சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்களால் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாதது ஏன் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.