TVK ADMK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் புதிய வேகத்தை எடுத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க இருப்பதால் மாநில கட்சிகளும் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தான் கட்சிகளனைத்தும் பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வருகின்றன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினை, திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதான ஊழல் புகார், தவெகவின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் போன்றவை தேர்தல் சமயத்தில் இவர்களுக்கு மிகப்பெரிய இடையூறாக அமைந்துள்ளது. இந்நிலையில் தான் அதிமுக இன்னும் 10 நாட்களுக்குள் ஒருங்கிணையாவிட்டால், என்னை போன்ற மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறியிருந்தார்.
இதனால் முதலில் பதவியை இழந்த அவர், அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் கூட்டு சேர்ந்ததால் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். இதன் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் அடுத்த நாளே தவெகவில் இணைந்தார். தவெகவுக்கு தகுந்த அரசியல் அனுபவம் வாய்ந்த நபர் ஒருவரின் தேவை இருந்ததால் செங்கோட்டையனின் சேர்க்கை அதற்கு பக்க பலமாக அமைந்தது. மேலும் தவெகவில் சேர்ந்த கையுடன் அதிமுகவை சேர்ந்த பலரையும் தவெகவில் சேர்ப்பேன் என செங்கோட்டையன் சபதம் எடுத்திருந்தார். இவ்வாறான நிலையில் இன்று புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. செங்கோட்டையன் தவெகவின் காட் பாதர் என்றெல்லாம் அழைக்கப்பட்டதால், இந்த பொதுக்கூட்டத்தில் அவர் முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் புதுச்சேரிக்கு வராதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இன்று கோபிச்செட்டிபாளையத்தில் முகாமிட்டு செங்கோட்டையன், அதிமுக சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் என்.என். சிவராஜ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரை அதிமுகவிலிருந்து விலக்கி தவெகவில் இணைத்து உள்ளார். செங்கோட்டையன் அவரது சபதத்தில் குறியாக உள்ள காரணத்தினால் மட்டுமே இன்று புதுச்சேரிக்கு செல்லவில்லை என்றும், கோபிச்செட்டிபாளையத்தை முழுமையாக தவெக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, விஜய் செங்கோட்டையனுக்கு உத்தரவிட்டுள்ளார் என்றும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.

