12 ராசிகளுள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ராசிகள் எவை என்று தெரியுமா!!இந்த 3 ராசிகாரர்களை நம்பி எதையும் செய்யலாம்!!

Photo of author

By Janani

இன்றைய உலகம் சுயநலம் நிறைந்த உலகமாக மாறிவிட்டது. தற்பொழுது எல்லாம் அவரவர் வாழ்க்கையை எவ்வாறு நன்றாக அமைத்துக் கொள்வது என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒரு செய்தியை கூறினால் அதனை ஒன்றுக்கு பலவாறு மற்றவர்களிடம் கூறுபவர்களே அதிகம் உள்ளனர். இதனால் எவரையும் நம்பி ஒரு காரியத்தை பற்றி சொல்வதற்கு இல்லை. ஆனால் இத்தகைய காலகட்டத்திலும் கூட ஒரு மூன்று ராசிகாரர்கள் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ராசிக்காரர்களை நம்பி எந்த ஒரு செய்தியையும் கூறலாம். அவ்வளவு நேர்மையானவர்களாகவும், நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாகவும் இந்த ராசிக்காரர்கள் விளங்குகின்றனர்.
இவர்கள் வீட்டில் உள்ள உறவுகளிடமும் சரி, சமூகத்தில் உள்ள உறவுகளிடமும் சரி மிகவும் நேர்மையானவர்களாகவும், உண்மையானவர்களாகவும் திகழ்வர். ஒரு செயல் ஆனது தனக்கும் பிறருக்கும் நன்மையையே ஏற்படுத்த வேண்டும் என நினைப்பவர்களும் இவர்கள்தான்.
1.) ரிஷப ராசி:
இந்த ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையானவர்களாகவும், எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களின் நம்பகத்தன்மைக்கு பிரச்சனை ஏற்படாதவாறும் நடந்து கொள்வார்கள். குடும்ப உறவுகளில் நம்பிக்கை பேணுவதாக இருந்தாலும் சரி, வேலையில் இலக்குகளை அடைய குழுவாக செயல்படுவதாக இருந்தாலும் சரி மிகவும் நம்பிக்கை கூறிய நபர்களாக செயல்படுவார்கள். இவர்களை கண்மூடித்தனமாக நம்பலாம். இவர்களின் அன்பும் நம்பிக்கையும் மிகவும் தூய்மையானதாக இருக்கும்.
மற்றவர்களுக்கு உதவும் பண்புகளை பிறவியிலேயே கொண்டவர்களாகவும் திகழ்வார்கள். பிறரிடம் எளிதாக பழகக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
2.) விருச்சிக ராசி:
இந்த ராசிக்காரர்கள் நட்பாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி அதை பராமரிப்பதில் மிகவும் அக்கறை காட்டுவார்கள். இவர்கள் காதல் வாழ்க்கையிலும் அதே போன்று திருமண வாழ்க்கையிலும் மிகவும் அன்பானவர்களாகவும், நம்பிக்கை உடையவர்களாகவும் விளங்குவார்கள். இந்த ராசிக்காரர்கள் எளிதில் நண்பர்களின் குழுவை உருவாக்குவதிலும், குழுவிலும் குடும்பத்திலும் மகிழ்ச்சியை உருவாக்குவதிலும் சிறந்து விளங்குவார்கள். ஒருவரின் கடினமான நேரத்திலும் உதவி செய்ய தயங்க மாட்டார்கள்.
3.) மகர ராசி:
மகர ராசியை சேர்ந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்த நபர்களாகவும் இருப்பார்கள். ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வேலை இடத்திலும் குடும்பத்திலும் ஒருபோதும் யாரிடமும் பொய் பேச மாட்டார்கள். எந்த ஒரு செயலையும் மனப்பூர்வமாக செய்யக்கூடிய இவர்கள் சற்று கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். இதனால் பிறரிடம் எளிதாக பழக சற்று யோசிப்பவர்களாகவும் இருப்பார்கள்.