மாணவர்களுக்கு குட் நியூஸ்! உள்ளூர் விடுமுறையை அறிவித்த மாவட்ட நிர்வாகம் எங்கே தெரியுமா?

Photo of author

By Sakthi

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியில் உலகப்புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் முக்கிய நிகழ்வான தபசு திருவிழா இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

இரவு காட்சி 12 மணியளவில் நடக்கும் என சொல்லப்படுகிறது. அத்துடன் ஆடிதபசை முன்னிட்டு இன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பூவொன்றை வெளியிட்டிருக்கிறது.

அதனடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 10ம் தேதியான இன்று தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும், விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு அந்த தேதியில் அரசு பொதுத்தேர்வுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு இந்த விடுமுறையை ஈடு கட்டும் விதத்தில் எதிர்வரும் 13 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சேலம் மாவட்டத்திலிருக்கின்ற கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி முதல் ஆரம்பமானது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலிருக்கின்ற அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது என தெரிவித்திருக்கிறார்.