நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புள்ள கட்சி எது தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?

Photo of author

By Sakthi

2019-20ம் நிதியாண்டுக்கான பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு தொடர்பான விவரத்தை ஏ.டி.ஆர் என்று சொல்லப்படும் சமூக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

7 தேசிய கட்சிகள் மற்றும் 44 பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு தொடர்பான முழுமையான விபரத்தை இந்த அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இதில் தேசிய கட்சிகளைப் பொறுத்தவரையில் பாஜக 4747.78 கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறது, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 588.16 கோடியுடன் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறது. அதேபோல 44 பிராந்திய கட்சிகளின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 2129.38 கோடியாக இருக்கிறது.

இதில் முதல் 10 இடங்களில் இருக்கின்ற பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு 2028. 715 கோடி என்று சொல்லப்படுகிறது, பிராந்திய கட்சிகளைப் பொறுத்தவரையில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 563.47 கோடியுடன் முதலிடம் பிடித்திருக்கிறது. சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 2வது இடத்தை பிடித்துள்ளது. இதன் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 301.47 கோடியாகும். அதேபோல அதிமுக 267.61 கோடியுடன் 3வது இடத்தில் இருக்கிறது.