கருட புராணத்தின் படி ஒரு கோவிலை தவிர வேறு எந்த கோவிலுக்கும் பேய்கள் செல்ல முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது சிவன் கோவில்களுக்கு பேய்களால் செல்ல முடியும். அதனால்தான் சிவபெருமான் “பூத நாத்” என்று அழைக்கப்படுகிறார். பூதநாத் என்ற பெயருக்கு “பூதங்கள் அல்லது பேய்களின் தலைவர்” என்று பொருள்.
சிவபெருமான் நல்லது, கெட்டது என பாராமல் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர். இதனால்தான் தெய்வீக ஆன்மாக்களாக இருந்தாலும் சரி, கட்டுப்பாடு இல்லாத ஆவிகளாக இருந்தாலும் சரி சிவபெருமானுக்கு இருவருமே சமம் தான். அதனால் தான் சிவபெருமான் தீய சக்திகளின் தலைவனாகவும், அகோரிகளின் கடவுளாகவும் திகழ்கிறார்.
சிவபெருமான் பேய்களிடம் தனக்கான கோவிலை ஒரே இரவில் கட்டும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், பேய்கள் ஒரே இரவில் இந்த சிவன் கோவிலை கட்டின. அந்தக் கோவிலின் பெயர் தான் “கக்கன்மாத் கோவில்”. இந்த கோவிலானது மத்திய பிரதேசத்தில், குவாலியர் நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிகோனியாவில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களுள் இதுவும் முக்கியமான ஒன்று. இந்த கோவில் பேய்களால் ஒரே இரவில் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து தான் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. அதுவும் சிமெண்ட், கலவை இது போன்ற எதையும் பயன்படுத்தாமல் வெறும் கற்களைக் கொண்டே இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவிலானது 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த கோவிலை சுற்றி உள்ள அனைத்து கோவில்களும் சேதம் அடைந்து உடைந்து இருந்தாலும், இந்த கக்கன்மாத் கோவில் மட்டும் இன்றும் பாதுகாப்பாகவே உள்ளது. மழை, புயல் என எது வந்தாலும் அந்த கோவிலுக்கு எதுவும் ஆகாமல் இருக்கிறது.
120 அடி உள்ள இந்த கோவிலின் மேல் பகுதியும், கோவிலின் கருவறையும் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் பாதுகாப்பாக தான் இருக்கிறது. ஆனால் இந்த கோவில் எப்படி கட்டப்பட்டது என்று இன்றுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கோவிலை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள், 20 கிலோமீட்டர் சுற்றிலும் உள்ள எந்த ஊரிலும் அந்த கற்கள் இல்லை என்று கூறுகிறார்கள்.
இரவு நேரங்களில் அந்த கோவிலில் அமானுஷ்ய சத்தங்கள் கேட்பதால் மக்கள் யாரும் அந்த கோவிலுக்கு செல்வதில்லை. சிவபெருமானின் தாண்டவ நடனத்தின் பொழுது பேய்கள், பிசாசுகள், பூதங்கள் போன்ற அனைத்தும் நடனம் ஆடும் என்று புராணங்கள் கூறுகிறது.