துர்க்கை அம்மனின் அருளை பெற்ற யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் என்று தெரியுமா..??

Photo of author

By Janani

துர்க்கை அம்மனின் அருளை பெற்ற யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் என்று தெரியுமா..??

Janani

சைத்ரா நவராத்திரி நாட்களில் இந்த உலக மக்கள் அனைவரும் துர்க்கை அம்மனை வழிபடுவர். இந்த நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு நீடிக்கும். எனவே இந்த ஒன்பது நாட்களும் துர்க்கை அம்மனை அர்ப்பணிப்புடன் வழிபட்டு விரதமும் இருப்பார்கள். துர்க்கை அம்மனின் அருளை பெறவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இந்த ஒன்பது நாட்களும் மக்கள் துர்க்கை அம்மனுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்வர்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு துர்க்கை அம்மன் எப்பொழுதும் நன்மை செய்வார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த ராசிகளை துர்க்கை அம்மனுக்கு மிகவும் பிடிக்கும். இந்த ராசிகளுக்கு எப்போதும் மகிழ்ச்சி இருக்கும் படி துர்க்கை அம்மன் பார்த்துக் கொள்வார்.

துர்க்கை அம்மனின் அருள் எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்? துர்க்கை அம்மனுக்கு எந்த ராசிகளை மிகவும் பிடிக்கும்? போன்ற விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

துர்க்கை அம்மனின் அருள் கிடைத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும், செல்வமும், வெற்றியும் கிடைக்கும். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம். பண பிரச்சினைகள் இருக்காது. பொருளாதார பிரச்சினைகளும் ஏற்படாது. உங்கள் ராசி இதில் இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. ரிஷபம் ராசி:
ரிஷப ராசிக்காரர்கள் மீது துர்க்கை அம்மனுக்கு மிகுந்த அன்பு உண்டு. ரிஷப ராசிக்காரர்களுக்கு துர்க்கை அம்மனின் அருள் எப்போதும் நிறைந்து இருக்கும். நீங்கள் எப்போதும் வெற்றியை அடைவீர்கள். புகழ் மற்றும் கௌரவத்தை பெறுவதோடு, நீங்கள் பணத்தையும் பெறுவீர்கள். நிதி சிக்கல்களும் இருக்காது.

2. சிம்மம் ராசி:
துர்க்கை அம்மன் சிங்கத்தின் மீதுதான் சவாரி செய்வார். எனவே துர்க்கை அம்மனின் அருள் சிம்ம ராசிக் காரர்களுக்கும் உண்டு. இந்த ராசிக்காரர்கள் எப்போதும் வெற்றியை அடைவார்கள். மேலும் சிம்ம ராசிக்காரர்கள் பிறவியிலேயே தலைவர்கள். நல்ல பணம் சம்பாதிப்பதோடு, அவர்கள் புகழையும் கௌரவத்தையும் பெறுவார்கள். அவர்கள் அரசியல் மற்றும் வணிகத்திலும் சிறந்து விளங்குவார்கள்.

3. துலாம் ராசி:
அடுத்ததாக துர்க்கை அம்மனின் அருள் துலாம் ராசிக் காரர்களுக்கும் உண்டு. இந்த ராசிக்காரர்கள் மிகவும் பாசமானவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு துர்க்கை அம்மனின் அருள் எப்போதும் இருக்கும். துர்க்கை அம்மனின் அருளால் அவர்கள் எப்போதும், ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும் புகழும், கௌரவமும் கிடைக்கும். நிதி சிக்கல்களும் இருக்காது, மகிழ்ச்சியாக இருப்பார்கள்.