கிருஷ்ணருக்கு புல்லாங்குழலை கொடுத்தது யார் என்று தெரியுமா..?? கிருஷ்ணர் அந்த புல்லாங்குழலை ஏன் உடைத்தார்..??

Photo of author

By Janani

கிருஷ்ணருக்கு புல்லாங்குழலை கொடுத்தது யார் என்று தெரியுமா..?? கிருஷ்ணர் அந்த புல்லாங்குழலை ஏன் உடைத்தார்..??

Janani

ஒருமுறை சிவபெருமானுக்கு பிருந்தாவனத்தில் குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கும் கிருஷ்ணரை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே ஈசனும் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக பிருந்தாவனத்திற்கு கிருஷ்ணரை பார்ப்பதற்காக ஒரு சிறுவன் உருவம் எடுத்து சென்றார்.

சிவபெருமான் சிறுவனின் உருவத்தில் கண்ணனுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தார். மிகவும் மனம் மகிழ்ந்து பால கிருஷ்ணருக்கு ஒரு பரிசு கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அந்த ஒரு பரிசு தான் பன்சூரி என்று அழைக்கப்படும் கிருஷ்ணரின் புல்லாங்குழல்.

கிருஷ்ணர் தனது எட்டாம் வயதிலிருந்து புல்லாங்குழலை வாசிக்க தொடங்கினார். கிருஷ்ணர் புல்லாங்குழலை இசைக்கும் பொழுதெல்லாம் ஒட்டுமொத்த பிருந்தாவனமும் அந்த இசையில் மயங்கி போகும் என்றே சொல்லலாம்.

எப்பொழுதும் ஆக்ரோஷமாக பாய்ந்து வரும் யமுனை நதி கூட, கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையை கேட்டதும் அதன் நீரோட்டப் பாதையை மாற்றி கண்ணன் இருக்கும் திசையை நோக்கி பாயுமாம்.

பல இதயங்கள் கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசைக்கு மயங்கினாலும், அவர் புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்ததற்கான ஒரே காரணம் அவரது பக்கத்து ஊரை சேர்ந்த தன்னைவிட 5 வயது பெரியவளான ராதைக்காக மட்டும் தான். கிருஷ்ணர் தனது வாழ்க்கையில் இரண்டே இரண்டு விஷயத்தை மட்டும் தான் நேசித்தார். அது ராதை மற்றும் அவரது புல்லாங்குழல்.

ஆனால் ராதைக்கு ஒரு முனிவரின் மூலம் ஒரு சாபம் கிடைக்கிறது. “கிருஷ்ணரை நீ இன்னொரு முறை சந்தித்தால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு கிருஷ்ணரை பிரிந்து தான் இருக்க வேண்டும்” என்ற சாபத்தை வழங்கினார். இதனால் மிகவும் மனமுடைந்த ராதை, என்னதான் முயற்சி செய்தாலும் கிருஷ்ணரை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று அவரைப் பார்க்கச் சென்று விடுகிறாள்.

ராதை கிருஷ்ணரை பார்த்த அடுத்த கனமே முனிவரின் சாபம் பலிக்க தொடங்கிவிட்டது. அதாவது அப்பொழுதுதான் கிருஷ்ணர் ராதையை முதல் முறையாக பிரிந்து மதுராவிற்கு செல்கிறார். விதியின் சூழ்ச்சியால் கிருஷ்ணர் மீண்டும் பிருந்தாவனத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். இவ்வாறே நூறு வருடங்களும் கடந்து விடுகிறது.

அதன் பிறகு வயதான நிலையில் ராதை கிருஷ்ணரை காண செல்கின்றாள். அப்பொழுது ராதையை பார்த்த கிருஷ்ணர் “நீ என்னை ஒரு முறை பிரிந்ததே போதும்” என்று கூற, ராதை உடனே அழ தொடங்கி விடுகிறாள். அதன் பிறகு ராதை கிருஷ்ணரிடம் எனக்காக ஒருமுறை உங்களது புல்லாங்குழலை வாசியுங்கள் என்று கேட்கிறாள்.

கிருஷ்ணரும் ராதையை நினைத்து புல்லாங்குழலை வாசித்தார். புல்லாங்குழல் வாசிப்பதை முடித்துவிட்டு கண்ணன் அவரது கண்களை திறந்து பார்க்கும் பொழுது, ராதை இறந்து கிடப்பதை பார்த்து தானும் ஒரு கடவுள் என்பதை மறந்து கதறி அழத் தொடங்குகிறார்.

இறுதியாக ராதையே என்னை விட்டு சென்று விட்டாள், ராதைக்காக நான் வாசிக்க தொடங்கிய இந்த புல்லாங்குழல் எதற்கு என்று உடைத்து தூக்கி எறிந்து விடுவார்.