நாய்கள் ஏன் இரவில் ஊளையிடுகின்றன என தெரியுமா..?? உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்..!!

Photo of author

By Janani

நாய்கள் ஏன் இரவில் ஊளையிடுகின்றன என தெரியுமா..?? உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்..!!

Janani

நாய்களை பெரும்பாலும் நமது செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றோம். ஆனால் சில வகை நாய்கள் காடுகளிலும், தெருக்களிலும் வாழக்கூடிய தன்மை கொண்டது. 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி இந்த உலகில், மூன்றில் ஒரு பங்கு வீடுகளில் நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதாவது பூமியிலே மிகவும் சிறந்த செல்லப் பிராணியாக இந்த நாய்கள் தான் வளர்க்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த நாய்கள் இரவு நேரங்களில் மட்டும் சத்தமிட்டு எதற்காக ஊளையிடுகிறது என்று யோசித்துப் பார்த்து உள்ளீர்களா? அதிலும் நாய்களின் அழுகை சத்தம் ஒரு வினோதமான சத்தமாக நம்மை பயமுறுத்தவும் செய்கிறது. இந்து மதத்தில் நாய்கள் ஊளை இடக்கூடிய இந்த சத்தம் கெட்ட சகுனமாக கூறப்படுகிறது.

மேலும் நாய்கள் கெட்ட ஆவிகளை பார்த்தால் தான் இது மாதிரியான சத்தங்களை எழுப்பும் எனவும் நம்பப்படுகிறது. ஆனால் இதற்கு பின்னாடி இருக்கும் உண்மை என்ன? நாய்கள் அழுவதற்கான உண்மையான காரணம் என்ன? போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கான விடைகளை தற்போது காண்போம்.

இந்த பூமியில் மனிதனுக்கு மிகவும் விசுவாசமான ஒரு ஜீவன் இருக்கிறது என்றால் அது நாய் தான். தெருக்களில் திரியும் நாய்களுக்கு ஏதேனும் ஒரு நாள் ரொட்டித் துண்டினை உணவாக கொடுத்தோம் என்றால் அது வாழ்நாள் முழுவதும் நம்மை மறவாமல் இருக்கும். ஆனால் இந்த நன்றியுள்ள ஜீவனின் பெயரை வைத்து தான் மற்றவர்களை திட்டவும் செய்கின்றோம்.

நாய்கள் என்பது மனிதர்களின் சிறந்த நண்பர்கள் மட்டுமல்ல, சிறந்த உதவி புரியும் ஜீவனாகவும் இருக்கும். இந்த நாய்கள் நமது வீடுகளை பாதுகாக்கவும், நாட்டின் எல்லைகளில் இருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கவும் என பல விதங்களில் உதவி செய்து வருகிறது. இவை அனைத்தையும் மீறி, நாய்கள் இரவு நேரத்தில் சத்தம் போடுவதை மட்டும் ஏன் கெட்ட சகுனம் என கூறுகிறார்கள்.

சிலர் நாய்கள் ஊளையிட்டால், மரணம் நமது வீட்டின் கதவை தட்ட போகிறது என்றும் நம்புவார்கள். மேலும் இந்த நாய்கள் மரணம் வரப்போவதை முன்கூட்டியே அறிந்திருப்பதால் தான், அதனை நமக்கு உணர்த்துகிறது என்றும் கூறுவார்கள். ஜோதிட சாஸ்திரங்களின்படி நமது முன்னோர்களின் ஆவிகளை பார்த்தது தான் நாய்கள் இவ்வாறு சத்தமிடுகிறது என்று கூறப்படுகிறது.

நாய்களின் பார்வை திறன் மற்றும் நுண்ணறிவு மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், அது நமது முன்னோர்களின் ஆவிகளை பார்த்ததும் அழுகைகளின் வாயிலாக நமக்கு உணர்த்துகிறது என்றும் கூறி வருகின்றனர். நமது கண்களுக்கு தெரியாத ஆவிகளை நாய்கள் பார்ப்பதை நமக்கு தெரிவிப்பதற்கு தான் இவ்வாறு சத்தம் விடுகின்றன.

வீடுகளில் வளர்க்கும் நாய்கள் ஊளையிட்டு கொண்டே இருந்தாலும், கண்களில் நீர் வடித்தாலும், திடீரென உணவு உண்ணாமல் இருந்தாலும் அந்த குடும்பத்திற்கு ஏதேனும் ஒரு பிரச்சனை வரப்போவதை உணர்த்துவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த நம்பிக்கைகளுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

இது போன்ற கருத்துக்கள் அனைத்தும் ஒவ்வொருவரது நம்பிக்கைகள். ஒரு சிலர் இதனை உண்மை என்றும், ஒரு சிலர் இதனை மூடநம்பிக்கை எனவும் கூறுவர். எனவே நாய்கள் இவ்வாறு ஏன் சத்தம் போடுகின்றன என்பது குறித்து அறிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.

இந்த ஆராய்ச்சிகளுக்குப் பிறகு நாய்களானது ஓநாய்களின் நெருங்கிய உறவுகள் என்பதால், ஓநாய்கள் மாதிரியே நாய்களும் அதுங்களுக்குள் ஒருத்தருக்கு ஒருத்தர் தொடர்பு கொள்ள இவ்வாறு சத்தம் போடுகின்றன என்பதை கண்டறிந்தனர். அதாவது இந்த சத்தத்தின் மூலம் நாய்கள் எங்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்கின்றன.

இதனால் மற்ற நாய்களால் அந்த சத்தம் போடக்கூடிய நாய் இருக்கக்கூடிய இடத்தை அறிந்து கொள்ள முடியும். வேறு சில விஞ்ஞானிகள் நாய்கள் வலியில் இருக்கும் பொழுது இது போன்ற சத்தத்தை எழுப்பும் எனவும், நாய்கள் ஒரு சமூக விலங்காக இருப்பதால் அதன் தனிமையை தனது சத்தத்தின் மூலம் வெளிப்படுத்தலாம் எனவும் கூறுகின்றனர்.