உங்கள் கனவில் இறந்தவர்களின் முகத்தை காண்கிறீர்களா..?? அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Janani

உங்கள் கனவில் இறந்தவர்களின் முகத்தை காண்கிறீர்களா..?? அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Janani

நமக்கு வரக்கூடிய கனவுகள் என்பது எப்பொழுதுமே விசித்திரமானதாக தான் இருக்கும். ஒரு கனவு நமக்கு எதற்காக வருகிறது? எதனால் வருகிறது? என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. சில கனவுகள் நமது எண்ணங்களின் கலவையாக இருக்கும். ஆனால் சில கனவுகள் நமக்கு ஏதேனும் ஒரு செய்தியை அறிவுறுத்துவதாக இருக்கும். இவ்வாறு கனவுகளில் கூட பல்வேறு வகைகள் உள்ளன.

அவற்றுள் ஒன்றுதான் நம்முடன் நெருங்கி பழகியவர்கள், மிகவும் நெருக்கமானவர்கள், மிகவும் பிடித்தவர்கள் என இவர்கள் நமது கனவில் வருவதும் ஒரு வகை. இவ்வாறு இறந்தவர்கள் நமது கனவில் வருவது என்ன பலனை நமக்கு கொடுக்கும் என்பதை கனவு சாஸ்திரங்கள் கூறுகிறது. அவற்றை தற்போது காண்போம்.

1. பேரன் பேத்தி என்று பெற்றெடுத்து நன்றாக தங்களது தலைமுறைகளுடன் வாழ்ந்து அனுபவித்த பெரியோர்கள் மரணமடைந்து நம் கனவில் வந்தால் அது நமக்கு அவர்கள் நேராக வந்து ஆசீர்வதிப்பது போன்ற பலனைத்தரும்.

2. இறந்து போன உங்கள் தந்தை உங்கள் கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று பொருள்.

3. இறந்து போன உங்கள் தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்குகோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கோ ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று பொருள்.

4. நமக்கு வேண்டப்பட்ட சிலர் யாராவது இறந்து விட்டது போல நமக்கு சில சமயங்களில் கனவுகள் வரும் அவ்வாறு கனவுகள் வந்தால் துன்பங்கள் அனைத்தும் விலகப் போகிறது என்று அர்த்தம்.

5. இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

6. இறந்து போனவர்களை(யாராக இருந்தாலும்) நாம் சுமந்து தூக்கி செல்வது போன்ற கனவு வந்தால் நமக்கு நன்மைகள் வந்து சேரும்.

7. இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.

8. இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்பும் ஏற்படும்.

9. இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள். விரைவில் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம். செல்வாக்கை இழந்தவர்களாக இருந்தாலும் நற்பெயர் திரும்ப பெற்று உற்றார் உறவினர்களிடத்தில் புகழின் உச்சிக்கே போவீர்கள்.

10. இறந்தவர்கள் உங்களுக்கு உணவ பரிமாறுவது போல கனவு கண்டால், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் தடை விலகி சுபமாக நடக்கும். வழக்கு நடந்து கொண்டு இருந்தால் அது உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

11. இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.

12. தான் இறந்துவிட்டது போல் கனவு வந்தால், நன்மைகளே ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

13. இறந்தவர்கள் கனவில் வந்து தொடர்ந்து உங்கள் பெயரை சொல்லி அழைத்து கொண்டே போல் கனவு வந்தால் உங்களுக்கு நற்செய்தி வர போகிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறியாகும்.

14. இறந்து போன தாய் , தந்தை தொடர்ந்து அடிக்கடி கனவில் வந்தால் நமக்கு வரப்போகும் ஆபத்துக்களை அவர்கள் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்துள்ளார்கள் என்று அர்த்தம்.

15. இறந்தவர்கள் வந்து கனவில் உங்கள் பெயரை ஒருமுறை சொல்லி அழைத்தால் நீங்கள் ஏதாவது ஒரு கடின நேரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை குறிப்பதாகும்.

16. குழந்தை இறந்து போனது போல கனவு கண்டால், ஆபத்து ஏற்பட போகிறது என்று பொருள்.

17. இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, அவர்களுக்கான பித்ரு காரியங்களை தவறாமல் மற்றும் குறை இல்லாமல் செய்ய வேண்டும். நல்லது.

18. துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.