பொடுகுத் தொல்லையால் தினமும் அவதியா? அப்படியென்றால் நெல்லிக்காயை இப்படி பயன்படுத்துங்க!

Photo of author

By Sakthi

பொடுகுத் தொல்லையால் தினமும் அவதியா? அப்படியென்றால் நெல்லிக்காயை இப்படி பயன்படுத்துங்க!
நம்மில் சில பேருக்கு இருக்கும் பொடுகுத் தொல்லையை குணப்படுத்த நெல்லிக்காயை வைத்து ஒரு எளிமையான மருந்து தயார் செய்து அதை தலைக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம்மில் ஒரு சிலருக்கு பொடுகுத் தொல்லை இருக்கும். இந்த பொடுகத் தொல்லையை சாதாரணமாக நாம் விட்டு விட்டால் அதுவே பிறகு நம் தலையில் பேண் கூட்டம் உருவாகக் காரணமாகி விடும். இந்த பொடுகு வரத் தொடங்கியதுடன் அதை தலையில் இருந்து நீக்க சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சை என்றால் மருத்துவ சிகிச்சையும் உள்ளது. இயற்கை வைத்திய முறையிலும் நம்முடைய தலையில் பொடுகு வராமல் தடுக்கலாம். அந்த வகையில் நெல்லிக்காயை வைத்து எவ்வாறு பொடுகை வராமல் தடுப்பது என்பது பற்றி தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* நெல்லிக்காய்
* வெந்தயம்
செய்முறை…
முதலில் வெந்தயத்தை நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெந்தயம் நன்கு ஊறிய பிறகு இதை ஒரு. மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் நெல்லிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அந்த மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். இதை நன்கு அரைத்து எடுத்தால் பொடுகை குறைக்கும் மருந்து தயார்.
இந்த மருந்தை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழிந்து குளிக்க வேண்டும். இது போல வாரம் ஒரு முறை செய்து வந்தால் பொடுகுத் தொல்லை குறையும்.