தடைச்செய்யப்பட்ட சீன செயலிகளை பயன்படுத்துகிறீர்களா:! அப்போ இதைபடிங்க!
நாட்டின் இறையாண்மை ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவின் 118 செயலிகள்,மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
ஆனால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சில ஆஃப்களை,மக்கள் இன்னும் பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.பொதுமக்கள் மட்டுமின்றி சில அரசு அதிகாரிகளும் இந்த ஆப்ஃகளை பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக இந்த 118 தடை செய்யப்பட்ட செயலிகளில் கேம்ஸ்கேனர் செயலியும் ஒன்றாகும்.கடந்த சில ஆண்டுகளாக இந்த ஸ்கேனர் செயலியானது,
ஆவணங்களை ஸ்கேன் செய்ய இந்தியாவில் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வந்தன.ஆனால் தற்போது,பாதுகாப்பு இன்மையின் காரணமாக கேம்ஸ்கேனர் தடை செய்யப்பட்டது.
ஆனால்,இன்றளவிலும் இந்தியாவில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசு ஊழியர்களும் அரசு சார்ந்த ஆவணங்களை ஸ்கேன் செய்ய இந்த ஸ்கேனர் தான் பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும் தற்போது கொரோனா காலம் என்பதால்,அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டிருந்த நிலையில்,சில அவசர வழக்குகளை மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதிகள் விசாரித்து தீர்ப்பு வழங்கி வந்தனர்.வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரிக்கும் இந்த வழக்குகளுக்கு தேவையான ஆவணங்களை பெரும்பாலும் வழக்கறிஞர்கள் இந்த கேம்ஸ்கேனர் செயலியை பயன்படுத்தி ஸ்கேன் செய்து அனுப்பி வந்துள்ளனர்.
இந்நிலையில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி உத்தரவின் பெயரில் செப்டம்பர் பத்தாம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தின் வலைதளத்தை கையாளும் அதிகாரிகள், சீன செயலிகளை பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் விரைவில் கண்டுபிடிக்கும் மாறும்,கேம் ஸ்கேனர் மூலம்,ஸ்கேன் செய்த அனைத்து ஆவணங்களையும் வேறு ஒரு பயன்பாட்டை பயன்படுத்தி மீண்டும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக நீதிமன்றத்தின் தினசரி ஆர்டர்கள் மற்றும் உத்தரவுகள் போன்றவற்றின் நகல்களைக் சீன செயல்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பின் சில அதிகாரிகளுக்கு,
அனுப்பப்பட்டு வருகின்றன.இந்தச் செயலானது, மத்திய அரசின் விதிமுறைகளை மீறுவதாக உள்ளது என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்குமேல் தடை செய்யப்பட்ட சீன செயலியை பயன்படுத்தி அரசு சார்ந்த ஆவணங்கள் ஸ்கேன் செய்து அனுப்ப கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.மேலும் பொதுமக்களும் இதுபோன்ற பாதுகாப்பற்ற செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.