மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் ஆசைகள் என்பது இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பலவிதமான முயற்சிகளை எடுப்போம். ஆனால் நாம் நினைத்ததற்கு எதிர் மாறாகவே அந்த செயல் முடியும். அதாவது நாம் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக இருக்கும்.
இதுபோன்று நாம் எடுக்கின்ற காரியம் அனைத்தும் தோல்வியிலே முடிகிறது, வெற்றியை காண முடியவில்லை என்று நினைப்பவர்கள் இந்த ஒரு எளிய செயலை செய்வதன் மூலம் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியில் முடிவதற்கான வாய்ப்பை பெற முடியும்.
வாழ்க்கையில் தோல்வியையே கண்டு வருபவர்கள், வெற்றியை நோக்கி முதல் படி எடுத்து வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஒரு எளிய செயலை செய்து பலன் அடையலாம்.
ஒரு காரியம் சித்தி அடைய வேண்டும் என்றால் சித்தி விநாயகரை வழிபட வேண்டும் என்று கூறுவார்கள்.
கோவில் கும்பாபிஷேகம், பூமி பூஜை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற அனைத்து பூஜைகளிலும் முதலாவதாக கணபதியை தான் வழிபடுவார்கள். அனைவரது துன்பங்களையும், துயரங்களையும் அறவே நீக்க கூடியவர் தான் பிள்ளையார்.
எந்த ஒரு முக்கியமான செயலை செய்வதற்கு முன்பாகவும் பிள்ளையாருக்கு ஒரு தேங்காயை உடைத்து விட்டு செய்தோம் என்றால், அந்த காரியம் நிச்சயம் வெற்றியில் முடியும் என்பது ஐதீகம். நூறு சூரிய பகவானுக்கு இணையானவர் தான் இந்த விநாயகர்.
“வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி சமப்பிரபா
நிர்விக்னம் குருமே தேவ
சர்வ கார்யேஷு சர்வதா!”
விநாயகருக்கு உரிய இந்த மூல மந்திரத்தை அனுதினமும் கூறும் பொழுது, அனைத்து நாட்களும் நிச்சயம் நன்மையை கொடுக்கக்கூடிய நாளாக உங்களுக்கு அமையும்.
சிறு பிள்ளைகளாக இருக்கும் பொழுது தீபாவளி நாட்கள், பொங்கல் நாட்கள், பிறந்தநாள் வரக்கூடிய நாட்கள் இது போன்ற நாட்கள் வருவதற்கு முன்பாகவே எவ்வாறு ஆவலுடன் இருப்போமோ, அதேபோன்றுதான் ஒரு முக்கியமான செயலை நாளை செய்யவிருக்கிறோம் என்கின்ற பொழுது, அந்த நாள் அதிகாலையில் இருந்தே ஒரு பத்து நிமிடம் ஆவது அந்த செயல் வெற்றியில் முடிந்ததாக எண்ணி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சிறு பிள்ளை பருவத்தில் எவ்வாறு ஆர்வமாக இருந்து அந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோமோ, அதே போன்று நாம் செய்யக்கூடிய செயலிலும் ஆர்வமாக இருந்தோம் என்றால் அந்த செயல் நிச்சயம் வெற்றியில் முடியும். மனதில் எந்த ஒரு பயமும், குழப்பமும் இருக்கக் கூடாது.