உங்களுக்கு விமானம் ஓட்ட ஆசையா? முன் அனுபவம் தேவையில்லை! ஏர் இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவப்பு!
முன் அனுபவம் இல்லாமல் விமானம் ஓட்ட ஆசையாக இருக்கும் நபர்களுக்கு என்றே தனித்துவமாக ஏர் இந்தியா நிறுவனம் ஒரு விமானப் பயிற்சி பள்ளியை தொடங்கவுள்ளதாக அறிவித்து இருக்கின்றது.
இந்தியாவில் ஏர் இந்தியா, ஏர் ஏசியா, இண்டிகோ என்று பல உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் விமான சேவைகளை நடத்தி வருகின்றது. விமான. சேவைகள் அதிகரித்துள்ளது ஒரு புறம் இருந்தாலும் விமானப் பயிற்சி பள்ளிகள் குறைவாகத்தான் இருக்கின்றது. இதையடுத்து அந்த குறையை போக்கும் விதமாக ஏர் இந்தியா நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது புதிய விமான பயிற்சி பள்ளி தொடங்கவிருப்பதாகவும் அதன் மூலமா வருடத்திற்கு 180 நபர்களுக்கு விமான சேவை அளிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் விமானப் பயிற்சி பள்ளிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதனால் பலரும் வெளிநாடு சென்று விமான பயிற்சி பெறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் விமானத்தில் வேலை செய்ய வேண்டும் என்று விரும்பும் நபர்களுக்கு பிரத்யேகமான பயிற்சி பள்ளியை தொடங்கவிருப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதியில் புதிய விமானப் பயிற்சி பள்ளி தொடங்குவதற்கான முயற்சிகளை ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. மேலும் இந்த விமானப் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படிக்க முன் அனுபவம் என்பது தேவையில்லை என்றும் தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சி பள்ளியில் முழுநேரமாக சேர்ந்து படித்து விமானி ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளது.