ஆடு மற்றும் கோழி பண்ணை அமைக்க வேண்டுமா.. மத்திய அரசு தரும் ரூ 50 லட்சம் மானியம்!!

Photo of author

By Janani

ஆடு மற்றும் கோழி பண்ணை அமைக்க வேண்டுமா.. மத்திய அரசு தரும் ரூ 50 லட்சம் மானியம்!!

Janani

Do you want to set up a goat and chicken farm.. 50 lakhs subsidy given by the central government!!

கால்நடைகள் வளர்ப்பதற்கு மற்றும் பண்ணை அமைப்பதற்கு என ரூ 50 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இறைச்சி, பால், முட்டை, கம்பளி உற்பத்தி போன்றவற்றை செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதனை தற்போது சிறிய அளவில் செய்து வருபவர்களும் தொழிலை விரிவு படுத்த இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் புதியதாக தொடங்க விரும்புபவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதற்கும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் மத்திய அரசு ‘தேசிய கால்நடை இயக்கம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் கால்நடை பராமரிப்பு மற்றும் கோழி பண்ணை துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த திட்டமானது 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்று கூறப்படுகிறது, ஆனால் இந்த ஆண்டுதான் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் இறைச்சி, பால், முட்டை மற்றும் கம்பளி உற்பத்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் திறன் பயிற்சியும் வழங்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் கற்பிக்கப்படுகிறது. இந்த திட்டமானது கால்நடைகள், கோழிகள், பன்றிகள் மற்றும் தீவன உற்பத்தி துறைகளுக்கு பொருந்தும். அதாவது இந்த துறைகளில் தொழில் தொடங்குவதற்கு மானியம் வழங்கப்படும்.

தனிநபர்கள், சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் நீங்கள் தொடங்கும் தொழிலை பொறுத்து மானியம் வழங்கப்படும். அதாவது கோழி பண்ணை வைப்பதற்கு ரூ 25 லட்சம், ஆடு பண்ணை வைப்பதற்கு ரூ. 50 லட்சம், பன்றி பண்ணை வைப்பதற்கு ரூ. 30 லட்சம், தீவனத் தொழிலுக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை உங்களுக்கு போதுமானதாக இல்லை என்றால் நீங்கள் வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் ஒரே தவணையாக பணம் வழங்கப்படாது. திட்டத்தின் தொடக்கத்தில் முதல் தவணைக்கான தொகை வழங்கப்படும் திட்டம் முடிந்ததும் இரண்டாவது தவணைத் தொகை செலுத்தப்படும்.

அதன் பிறகு மூன்றாவது தவணை பணம் வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கு முதலில் https://dahd.nic.in/schemes-programmes என்ற இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து திட்டம் தொடர்பான ஆவணங்களை அதில் பதிவேற்ற வேண்டும். பதிவேற்றிய அடுத்த 21 நாட்களுக்குள் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? இல்லையா? என்ற தகவல் தெரிவிக்கப்படும்.