பெண்கள் தங்களது பணத்தை வைக்கக்கூடிய பேக் மற்றும் மணி பர்ஸ் கிழிந்து இருந்தால் அதனை தைத்து வைத்து பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நாம் பணம் வைத்து புலங்கக்கூடிய அந்தப் பொருள் எப்பொழுதும் ஒரு நேர்மறை ஆற்றலுடன் இருக்க வேண்டும். கிழிந்து இருந்தால் அது ஒரு விதமான எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கி விடும். எனவே பெண்கள் பணம் வைக்கக்கூடிய பர்ஸ் தெளிந்து இருந்தால் அவரவர் வசதிக்கு ஏற்ப புதிய பேக் அல்லது பர்ஸ் ஐ வாங்கி பயன்படுத்துவது நல்லது.
ஏனென்றால் பணம் வைக்கக்கூடிய இடம் என்பது ஒரு நல்ல அம்சத்துடன் இருக்க வேண்டும். வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் அனைவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது, அவர்கள் பயன்படுத்தக்கூடிய பேக் அல்லது பர்ஸ் ஐ சுத்தம் செய்ய வேண்டும். அதாவது தேவை உள்ள பொருட்களை மட்டும் உள்ளே வைத்துக்கொண்டு, தேவையற்ற பொருட்களை வெளியில் போட்டு விட வேண்டும்.
நமது வீட்டில் உள்ள அறை ஒவ்வொன்றையும் எவ்வாறு வைத்துக் கொள்கிறோமோ, அதாவது இந்த அறையில் இந்த பொருட்கள் தான் இருக்க வேண்டும் என்று நாம் வைத்துக் கொள்வது போன்று, நமது பேக்கில் உள்ள அறைகளையும் தனித்தனியாக பிரித்து பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும்.
வீடு என்பது சுத்தமாக இருந்தால் தான் லட்சுமி கடாட்சம் என்பது உருவாகும்.
அதனைப் போன்று தான் நாம் பயன்படுத்தக்கூடிய பேக் அல்லது பர்சும் சுத்தமாக இருந்தால்தான் லட்சுமி கடாட்சம் தங்கும். அதேபோன்று நமது பேக்கில் வாசனை திரவியங்கள் இருப்பது நேர்மறை ஆற்றல்களை உருவாக்கி தரும்.
ஒரு சில பொருட்களை நமது பேக் அல்லது பர்ஸ்ஸில் வைப்பதன் மூலம் வீண் செலவுகள் ஆகாமல், பணமானது நமது பேக்கில் தங்கும். அதாவது கோமதி சக்கரம், நெல்லி சக்கை, நெய், கொட்டைப்பாக்கு, பச்சை கற்பூரம், திரவிய பட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோமதி சக்கரம் மற்றும் நெல்லிச் சக்கையை நெய்யில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து அடுத்த நாள் காய வைக்க வேண்டும். திரவிய பட்டை மற்றும் கொட்டைப்பாக்கை மஞ்சள் கலந்த நீரில் கழுவி காய வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நெல்லி சக்கையை நாம் பணம், டாக்குமெண்ட் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவை வைக்கக்கூடிய இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.
ஒரு பேப்பரில் திரவிய பட்டை, பச்சைக் கற்பூரம், கொட்டைப்பாக்கு ஆகியவற்றை மடித்து பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துக் கொள்ளலாம். அதேபோன்று கோமதி சக்கரத்தையும் பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த பொருட்களை எடுத்து விட்டு, புதிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
நமது பேக் அல்லது பர்ஸ்ஸில் உள்ள பணத்தை நாமே எடுத்து நாமே வைக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் மற்றவர் நமது பணத்தை எடுக்கும் பொழுதோ அல்லது வைக்கும் பொழுதோ கைராசி என்பது மாறும். அது நல்லதாகவும் அமையலாம், கெட்டதாகவும் அமையலாம். எனவே முடிந்தவரை நமது பணத்தை நமது கையாலே எடுத்து புழங்குவது நல்லது.