ஒரு சிலரின் வேண்டுதல்கள் அவர்கள் வேண்டிய சில நாட்களுக்கு உள்ளேயே நிறைவேறி விடும். இதற்கு காரணம் இந்த பிரபஞ்சம் தான். இந்த பிரபஞ்சத்தின் சக்தி அதிக அளவில் உள்ள இடங்களில் தான் நமது முன்னோர்கள் கோவில்களை கட்டி வைத்துள்ளனர். எனவே தான் இந்தப் பிரச்சனைக்கு இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஒரு வழியை நமக்கு கூறுகின்றனர்.
அந்தக் கோவிலுக்கு சென்று நாம் வழிபாடு செய்யும் பொழுது கண்டிப்பாக நமது பிரச்சனை சரியாகிவிடும் என்பதை ஒரு சிலர் உணர்ந்து இருப்போம். நமக்கு தேவைகள் என நிறைய இருக்கும். ஆனால் வேண்டுதல்கள் என்பது ஒரு குறிப்பிட்ட சில விஷயங்கள் மட்டுமே இருக்கும்.
அத்தகைய வேண்டுதல்களுள் எந்த வேண்டுதல் நமக்கு உடனடியாக நிறைவேற வேண்டுமோ, அந்த வேண்டுதல்களை நம் மனதில் நிலை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அம்மன் கோவில்களுக்கு சென்றாலே உப்பு வாங்கி போட்டு வேண்டுதல் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.ஏனென்றால் உப்புக்கும் நமது வேண்டுதல்களுக்கும் இடையே ஒரு பிரபஞ்சத்தின் சக்தி இருப்பதாக அர்த்தம்.
நமக்கு உடனடி தேவையாக இருக்கக்கூடிய ஒரு வேண்டுதலை நினைத்து அதிகாலை நேரத்தில் பூஜை அறையில் அமர்ந்து நமது இரண்டு கைகளிலும் கல் உப்பினை எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நமது கண்களை மூடி நமக்கு என்ன வேண்டுமோ அந்த வேண்டுதல் நிறைவேறியவாறு பிரபஞ்சத்திற்கு நன்றி கூற வேண்டும்.
உதாரணமாக நிலம் வாங்க வேண்டும் என்றால் “இன்று எனக்கு இதை நிறைவேற்றிக் கொடுத்ததற்கு நன்றி பிரபஞ்ச சக்தியே”என்று கூற வேண்டும். இதில் உள்ள ‘இன்று’ என்ற வார்த்தை மிகவும் முக்கியம். இந்த வார்த்தையை கூறி நமது வேண்டுதல்கள் நிறைவேறியதாக கருதி, பிரபஞ்சத்திற்கு நன்றி கூற வேண்டும்.
நமது இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்துக்கொண்டு ‘இன்று எனக்கு சொந்த நிலம் கொடுத்ததற்கு நன்றி பிரபஞ்ச சக்தியே’ என்று நம்மால் எவ்வளவு நேரம் அமர்ந்து கூற முடியுமோ அவ்வளவு நேரம் கூறலாம்.
இவ்வாறு கூறிய பின்னர் நமது கையில் உள்ள உப்பை ஓடுகின்ற நீரில் அதாவது ஏரி, குளம், கிணறு இது போன்றவைகளில் போட்டு விட வேண்டும்.
அவ்வாறு இல்லை என்றால் நமது வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த உப்பை போட்டு விட வேண்டும்.
இந்த உப்பு கரைந்த பின்னர் அந்த தண்ணீரை நமது சமையலறையில் உள்ள சிங்க் தொட்டியில் ஊற்றிவிட்டு, சிறிது தண்ணீரை திறந்து விட்டால் ஓடுகின்ற நீரில் விட்டது போல அர்த்தம்.
நமது வாழ்க்கையில் நமக்கு கிடைத்துள்ள அனைத்து விஷயங்களுக்கும், பொருட்களுக்கும் இந்த பிரபஞ்சம் தான் காரணம். இந்த பிரபஞ்சத்திடம் நாம் முழு மனதுடன், முழு நம்பிக்கையுடன் கேட்கும் பொழுது நாம் கேட்க கூடிய அனைத்து செயல்களும் கண்டிப்பாக நமக்கு கிடைக்கும்.