பூஜை அறை வழிபாட்டில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபட்டு வருகிறீர்களா..?? அதற்கான பலன் என்னவென்று தெரியுமா..??

Photo of author

By Janani

பூஜை அறை வழிபாட்டில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபட்டு வருகிறீர்களா..?? அதற்கான பலன் என்னவென்று தெரியுமா..??

Janani

நமது வீட்டின் பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து வழிபடுவதை பலரும் பின்பற்றி வருகின்றனர். பூஜை செய்யப்படும் நாட்களில் மட்டும் அல்லாமல் அனைத்து நாட்களிலும் அந்த பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பதை பலன் என்ன என்பது குறித்து தற்போது காண்போம்.

ஒரு சிலர் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபாடு செய்வார்கள். ஆனால் அந்த தண்ணீரை எப்பொழுது மாற்ற வேண்டும்? எவ்வாறு முறையாக அதில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்? என்பது குறித்து தெரியாமல் இருப்பர். கடவுளுக்கு என வைக்கக்கூடிய இந்த பஞ்ச பாத்திரத்த தண்ணீரை சரியான முறையில் வைத்து பராமரிக்க வேண்டும்.

வீட்டில் பூஜை செய்யும் பொழுது எல்லோரும் நிவேதனம் மற்றும் தண்ணீரை தீர்த்தமாக வைப்பது வழக்கம். நிவேதனமாக ஏதேனும் ஒரு பிரசாதத்தை கண்டிப்பாக நாம் கடவுளுக்கு வைக்க வேண்டும். எதுவும் இல்லை என்றாலும் கூட கற்கண்டு, சர்க்கரை, பேரிச்சம் பழம் இது போன்றவைகளை நிவேதனமாக வைக்கலாம்.

நாம் தினமும் பூஜை செய்கிறோமோ இல்லையோ ஆனால் கடவுளுக்கு தினமும் விளக்கேற்றி, ஏதேனும் ஒரு நிவேதனம் மற்றும் தண்ணீரை கண்டிப்பாக வைக்க வேண்டும். நாம் எவ்வாறு தினமும் உணவு மற்றும் தண்ணீரை பருகுகிறோமோ, அதே போன்ற கடவுளுக்கும் தினமும் ஏதேனும் ஒரு நிவேதனத்தை வைக்க வேண்டும்.

எந்த ஒரு பொருளும் வைக்காமல் கடவுளை வழிபடக்கூடாது. அதேபோன்று பஞ்சபாத்திர தண்ணீரும் கண்டிப்பாக தினமும் வைக்க வேண்டும். பஞ்ச பாத்திரம் இல்லை என்றாலும் கூட, ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி வைக்க வேண்டும்.
இந்த பஞ்ச பாத்திர தண்ணீரில் துளசி, சிறிதளவு பச்சைக் கற்பூரம், மஞ்சள் தூள் இதனை போட்டும் வைக்கலாம். இந்த பொருள்கள் கிடைக்காதவர்கள் வெறும் தண்ணீரில் மஞ்சள் தூள் மட்டும் போட்டு வைக்கலாம்.

இந்த பஞ்ச பாத்திர தண்ணீரை மாற்றும் பொழுது அந்தப் பழைய தண்ணீரை செடிகளுக்கோ அல்லது கால் படாத இடத்திலோ தான் ஊற்ற வேண்டும். தினமும் கடவுளுக்கு என ஏதேனும் ஒரு நெய்வேதனம் மற்றும் தண்ணீரை வைத்தேன் நமது குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை நினைத்து வழிபடும் பொழுது, எத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை எதிர்த்து போராடக்கூடிய சக்தி நமக்கு கிடைக்கும்.

நமது வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனை ஏற்பட்டாலும் அதனை தாங்க கூடிய சக்தியையும், அந்த பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழியையும் அந்த கடவுள் நமக்கு கொடுப்பார். நான் கடவுளிடம் கேட்கக் கூடிய வேண்டுதல்கள் அனைத்தும் இந்த பஞ்ச பாத்திர தண்ணீரில் தான் வந்து இறங்கும்.

எனவே நமது வேண்டுதல்கள் அனைத்தும் நமக்கு நிறைவேறும். இதனால் தான் பஞ்ச பாத்திர தண்ணீரை, நமது வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுவது என்பது மிகவும் முக்கியமான ஒரு முறையாக கூறப்படுகிறது.

இந்த பஞ்ச பாத்திரத்தில் உள்ள தண்ணீரை நமது குடும்பத்தில் உள்ள அனைவரும் பகிர்ந்து குடிக்கும் பொழுது, குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு இல்லை என்றால் செடி, கொடிகளுக்கு இந்த தண்ணீரை ஊற்றி விடலாம்.

கடவுளுக்கு தண்ணீர் வைக்காமல் ஒருநாளும் விடக்கூடாது. எனவே தினமும் இந்த பஞ்ச பாத்திரத்தில் உள்ள தண்ணீரை மாற்றிவிட்டு, புதிய தண்ணீரை ஊற்றி வைத்து வழிபாடு செய்வதன் மூலம், பல்வேறு நன்மைகள் நமது குடும்பத்திற்கு வந்து சேரும். மேலும் வீட்டில் உள்ள வறுமை நீங்கும்.