ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த கதிர் முல்லை! நடந்தது என்ன?

0
251

விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடரில் தற்சமயம் வெளியாகி இருக்கும் விளம்பரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இருக்கிறது.

ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் தனம் மற்றும் மீனா உள்ளிட்ட இருவருக்கும் குழந்தைகள் பிறந்திருக்கும் சூழ்நிலையில், திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததன் காரணமாக, ஊரார் மற்றும் குடும்பத்தினர் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதன் காரணமாக,மன உளைச்சல் அடைந்த முல்லையை மருத்துவமனைக்கு கதிர் அழைத்து சென்றிருக்கிறார். அங்கே அவர்கள் இருவரையும் முழுமையான பரிசோதனை செய்த பிறகு அதற்கான அறிக்கை தொடர்பாக மருத்துவர் கதிரிடம் அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறி இருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது.

சிறுவயதில் முல்லைக்கு கருப்பையில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததாகவும், இதன் காரணமாக, அவருக்கு இயற்கையாகவே குழந்தை பெறும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் மருத்துவர் கூறியிருக்கின்றார். மருத்துவர் கதிரிடம் தெரிவிக்கும்போது முலையை அறைக்கு வெளியே அனுப்பி விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே முல்லை இந்த முடிவை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப் போகிறார் என்று கதிர் வருத்தம் அடைகின்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடரில் காதல் ஜோடிகளாக கதிர் முல்லை வலம் வந்தார்கள் அவர்களுக்கு இவ்வாறு ஒரு நிலைமையா என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.

ஆனாலும் மருத்துவர் நவீன முறை சிகிச்சை முறையை செயல்படுத்தி குணப்படுத்தி குழந்தை பெறும் வாய்ப்பை பெற முயற்சி செய்யலாம் என்று கூறியிருப்பதால் இனி வரும் தினங்களில் முல்லை, கதிர் உள்ளிட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மிக விரைவில் குழந்தையை பெற்றெடுக்க இருக்கிறார்கள் என தெரிவிக்கிறார்கள்.

என்னதான் இந்த நெடும் தொடரின் கதை சுவாரசியமாக சென்று கொண்டிருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த கதிர் முல்லை ரொமான்ஸ் தற்சமயம் இல்லை என்பதே இந்த தொடரின் ரசிகர்களுடைய மன கவலையாக இருந்து வருகிறது.

கடந்த 2 ஆண்டு காலமாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தது இவர்களுடைய காதல் காட்சிகளைத் தான் ஆனால் பெரிய அளவில் அதுபோன்ற காட்சிகள் இந்த தொடரில் இடம்பெறவில்லை இனி வரும் காலங்களிலாவது அப்படிப்பட்ட காட்சிகள் இடம் பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Previous articleசூர்யாவின் அடுத்தடுத்த 4 தரமான இயக்குனர்களுடனான பயணம்! அடுத்த ஆஸ்கருக்கு திட்டமா?
Next articleபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் என்ட்ரி கொடுத்த பிரியங்கா! யாருடன் புகைப்படம் எடுத்து இருக்கிறார் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here