நடிகர் தனுஷ் விவாகரத்து வழக்கில் விருப்பம் இருக்கா இல்லையா!! குடும்ப நல நீதிமன்றம் கடும் கேள்வி!!

Photo of author

By Jeevitha

Cinema news: நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வரும் நவ.2-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷ் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். பிறகு பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர்-18 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

ஆனால் சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காக இருந்தது. அதனை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதில் தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இதனிடையே அவர்களின் பிரச்சனையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பல முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் மீண்டும் சேருவதாக முடிவு செய்யவில்லை. இந்த நிலையில் அவர்களின் மனு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுபாதேவி முன்பாக இன்றும் விசாரணைக்கு வந்தது.

ஆனால் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணை நவம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இந்த விவாகரத்து கோரிய வழக்கில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மூன்றாவது முறையாக ஆஜராகவில்லை, அடுத்த விசாரணைக்கு இருவரும் வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.