பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு முடிவு! 

Photo of author

By Sakthi

பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு முடிவு!

பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் அவர்கள் கூறியுள்ளார்.

நாம் நம்முடைய மனதை கட்டுப்படுத்த முயன்றாலும் நம்முடைய நாக்கை கட்டுப்படுத்த முடிவதில்லை. சாலையோரம் கிடைக்கும் உணவுகள் அனைத்தையும் நாம் ருசி பார்த்து விடுகின்றோம். அந்த வகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிடும் சாலையோர உணவாக பானிபூரி இருந்து வருகின்றது.

அதிலும் மசால் பாதி பூரியை யாரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. மாற்றாக உருளைக்கிழங்கு வைத்து அதில் பச்சை நிறத்தில் இருக்கும் புதினா தண்ணீரை ஊற்றி கெடுக்கும் பானிபூரியை தான் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த பானிபூரி சுகாதாரமாக தயாரிக்கப்பட்டதா புதினா தண்ணீர் புதியதா அல்லது பழையதா என்பது குறித்து நமக்கு எதுவும் தெரிவது இல்லை. இந்நிலையில் சென்னையில் உள்ள பானிபூரி கடைகளில் சென்னை உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் அவர்கள் ஆய்வு நடத்தினார்.

அப்பொழுது அந்த ஆய்வில் பெரும்பாலான பானிபூரி கடைகளில் பாதுகாப்பு என்பதே இல்லை. அவர்கள் யாரும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் பானிபூரி விற்பனை செய்து வருகின்றனர். பானிபூரி கடைகளில் பானிபூரிக்கு கொடுக்கப்படும் மசாலா தண்ணீர் ஒரு நாள் பயன்படுத்தப்பட்டு மீண்டும் அதே தண்ணீர் அடுத்த நாளும் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் பானிபூரிக்கு வழங்கப்படும் புதினா ரசம் மிகவும் பச்சை நிறமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் செயற்கை நிறமியை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு உணவில் செயற்கை நிறமியை பயன்படுத்தும் பொழுது இந்த உணவை வாங்கி சாப்பிடும் நபர்களுக்கு கேன்சர் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.

நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் பொழுது சில மாதிரிகளையும் கைப்பற்றியுள்ளோம். இதை வைத்து ஆய்வு நடத்தவுள்ளோம்” என்று சென்னை உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் அவர்கள் கூறியுள்ளார்.