இந்து சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியுள்ள சில விஷயங்களை, மூடநம்பிக்கைகள் என புரியாதவர்கள் கூறுவார்கள். ஆனால் நமது முன்னோர்கள் அதனை என்ன காரணத்தால்? எந்த அர்த்தத்தினால்? அதனை கூறியுள்ளார்கள் என்பதை அனுபவம் ரீதியாக காலப்போக்கில் தான் அதனை உணர்ந்து கொள்வோம்.
அந்த வகையில் கருவண்டு என்று சொல்லக்கூடிய உயிரினம், வீட்டிற்குள் வரக்கூடாது என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறார், உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்றால் அவரை சுற்றியுள்ள பலர் பொறாமை கொள்வார்கள். அவர் அவரது கடின உழைப்பாலும், முயற்சியாலும் முன்னேறி இருப்பார். ஆனால் மற்றவர்கள் நம்மால் முன்னேற முடியவில்லையே என்ற ஏக்கத்துடனும், பொறாமை குணத்துடனும் பார்ப்பார்கள்.
நம்மிடம் அதிகப்படியான நேர்மறையான எண்ணங்களும், தெய்வீக சக்திகளும் இருக்கிறது என்றால் நம்மை நோக்கி வரும் பொறாமைகளையும், கெட்ட எண்ணங்களையும் நீக்கிவிட முடியும். ஆனால் ஒரு வேளை நம்மிடம் நேர்மறை ஆற்றல்கள் குறைவாகவும், தெய்வீக சக்திகள் குறைவாகவும் இருக்கின்ற பொழுது இந்த தீய சக்திகள் நம்மிடம் விரைவாக வந்து சேர்ந்து விடும்.
இவ்வாறு தீய சக்திகள் நம்மிடம் வந்து விட்டால் நமது குடும்பத்தில் பலவிதமான சண்டை சச்சரவுகள், நோய்வாய்ப்படுதல், வருமானம் குறைதல் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட தொடங்கும். இவ்வாறு நடக்கும் பொழுது நம்மை பிடிக்காத யாரோ ஒருவர் நமது குடும்பத்திற்கு பில்லி, சூனியம், ஏவல் இது போன்ற ஏதேனும் ஒன்றை செய்து விட்டார்கள் என்று நினைப்போம்.
இதனை உணர்த்தக்கூடிய விதமாகத்தான் கருவண்டு நமது வீட்டிற்கு வருகிறது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் மனிதர்களின் நடமாட்டம் இல்லாத வீடுகளில் இந்த பூச்சியானது வரும் என்றும், இனச்சேர்க்கைக்காக ஒரு இடத்தை தேடி வரும் என்றும், அந்தப் பூச்சிக்கு தேவையான உணவு அதிகப்படியாக கிடைக்கக்கூடிய இடத்திற்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
அதிகப்படியான தேன் இருக்கக்கூடிய பூக்களை கொண்ட செடிகள் நமது வீட்டில் இருக்கிறது என்றாலும் இந்த கருவண்டு வரும். இவை அனைத்தும் இயற்கை சார்ந்து கூறக்கூடிய காரணங்கள். ஆனால் நமது முன்னோர்கள் உங்களது வீட்டின் மேல் அதிகப்படியான கண் திருஷ்டி, பொறாமை, தீய எண்ணங்களின் அதிர்வலைகள் இருப்பதை உணர்த்தக்கூடிய விதமாகத்தான் இந்த கருவண்டு வீட்டிற்கு வருகிறது என கூறியுள்ளனர்.
இந்தக் கருவண்டு நமது வீட்டில் தீய சக்திகள் இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய ஒரு அறிகுறி. எனவே இந்த கருவண்டு நமது வீட்டிற்கு வந்தால் கொல்லக் கூடாது. அதற்கு பதிலாக துரத்தி விட வேண்டும். இவை நம்பிக்கை சார்ந்து கூறக்கூடிய ஒரு காரணம்.
இந்தக் கருவண்டு நமது வீட்டிற்கு வருவதற்கு கூறக்கூடிய காரணம் மூடநம்பிக்கையாக இருந்தாலும் கூட, இதனை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக இருப்பது நல்லது. இந்தக் கருவண்டு நமது வீட்டிற்கு வருகிறது என்றால் கணவன் மனைவி முன்னெச்சரிக்கையாக இருந்து, பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.
அதேபோன்று ஏதேனும் ஒரு தொழிலை தொடங்கும் பொழுது அல்லது முதலீடு செய்யக்கூடிய காரியங்களில் சற்று கவனமாக இருந்து கொள்ள வேண்டும். இதேபோன்று அனைத்து விஷயங்களிலும் சற்று யோசித்து கவனமாக செயல்படுவது நல்லது.